Tuesday 13 May 2014

யாமிருக்க பயமேன் - திரை விமர்சனம்

கழுகு படத்தில் கலக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பிதான் இந்த படத்தின் நாயகன் கிருஷ்ணா.  காதலி ரூபா மஞ்சரியுடன் சென்னையில் ஆண்மை இழந்தவர்களுக்கான மருந்து விற்பனை செய்து வாழ்ந்து வருகிறார்.

கழகு படத்தில் கதாநாயகனாக நடித்த இயக்குநர் விஷ்னு வர்தனின் தம்பிதான் இந்த படத்தின் ஹீரோ.

ஆண்மையிழந்தவர்களுக்கு மருந்துவிற்பவர் கதாநாயகன். அவருடைய காதலி ரூப மஞ்சரி. இருவரும் சென்னையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஒரு நாளை கதாநாயகனுக்கு மொட்டை கடிதாசி வருகிறது. அதில் கொல்லி மலையில் அவர்களுடைய பூர்வீக சொத்து இருப்பதாகவும், அந்த சொத்தை கைப்பற்ற கருணாவை காண்டாக்ட் செய்துகொள்ளும்படி இருக்கும்.
yamirukka-payam-yen-thirai-vimarchanam

அதைப் பார்த்த ஹீரோ, ஹீரோயின் சொத்தை மீட்பதற்கு கொல்லிமலை செல்கின்றனர்.

அங்கு தனது பூர்வீக சொத்து பாழடைந்த பங்களாக இருப்பதையும், அதை கருணாவும், ஓவியாவும் பராமரிப்பதை அறிந்துகொள்கின்றனர்.

அதற்கு பிறகு அவர்கள் 4 பேர்களும் சேர்ந்து அதை ஒரு லாட்ஜாக மாற்றுகின்றனர்.  அந்த லாட்ஜில்  தங்குபவர்கள் திடீர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர்.

மரணம் அடைந்தவர்கள் குறித்து எவ்வித தகவல்களையும் போலீசிடம் சொல்லாமல் சடலத்தை அவர்களேபுதைத்து யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடுகின்றனர். ஆனால் போலீஸ் கிருஷ்ணாவை அழைத்து பிணங்கள் புதைத்த இடத்தில் புதையல் இருப்பதாக சந்தேகம் கொள்கின்றனர்.

இதனால் பயத்தில் கிருஷ்ணா, அங்கு உண்மையில் புதையல் இல்லை என்றும் தாங்கள் புதைத்த பிணங்கள்தான் இருக்கின்றது என்றும் சொல்கின்றனர். ஆனால் புதைத்த இடத்தில் பிணங்கள் இல்லை. மாயமாய் மறைந்துவிடுகிறது.

அதன்பின்னர் தாங்கள் புதைத்த அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே மரணம் அடைந்தவர்கள் என்றும், பேய் வடிவில் அவர்கள் வந்துள்ளனர் என்றும் அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.

இறந்தவர்கள் யார்? அவர்கள் எதற்காக மீண்டும் வந்தார்கள்? என்பதை சஸ்பென்ஸ் கலந்த காமெடி படமாக சொல்லிருக்கிறார் இயக்குனர் டி.கே.

கிருஷ்ணா நடிப்பில் அசத்தியுள்ளார். டபுள் மீனிங் வசனங்களை அசால்ட்டாக பேசுகிறார். ரூபா இவருக்கு சரிக்கு சமமாக ஈடுகொடுத்து நடித்துள்ளார்.

பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் நனைகிறார். ஓவியாவை வழக்கம்போல் இந்த படத்திலும் சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும்

த்ரில்லர் படத்தை காமெடியுடன் நகர்த்திய இயக்குனரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை போரடிக்கவே இல்லை. படம் தொடர்ந்து ரசிக்கும்படி போய்க்கொண்டே இருப்பதால் இறுதிவரை சலிப்பு தட்டாமல் செல்கிறது.

ரசித்துப் பார்க்கலாம். 

0 comments

Post a Comment