Saturday 3 May 2014

சவுதி அரேபியா செல்பவர்களுக்கு புதிய சுவாச நோய் அபாயம்

சவுதி அரேபியாவில் மெர்ஸ் என்ற புதிய சுவாச நோய் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 370 பேரை நோய் தாக்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 107 பேர் இந்நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் சவுதிஅரேபியாவில் இருந்து எகிப்து திரும்பிய வாலிபர் ஒருவர் மெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த வாரம் தெரியவந்தது.

ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

veli-nau-selbavarkalukku-puthiya-suvasa-noi-abayam

இதனை உறுதி செய்த எகிப்து சுகாதாரத்துறை அமைச்சகம், சவுதி அரேபியா செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், நாள்பட்ட இருதய நோய், மார்பக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சவுதி அரேபியா செல்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0 comments

Post a Comment