Saturday 3 May 2014

பள்ளி செல்லும் பெண்ணை கிண்டல் செய்ததால் எகிப்தில் பயங்கர கலவரம்..!

எகிப்தில் அஸ்வான் மாகாணத்தில் மலைவாழ் மக்கள் அதிகஅளவில் வாழ்கிறார்கள்.

இங்குள்ள பாணி ஹலால் மற்றும் நுபியன் தபோடியா பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

பள்ளி மாணவி ஒருவரை மாணவர்கள் சிலர் கிண்டல் செய்த விவகாரம் தான் கலவரத்திற்கு காரணமாகும்.

palli-sellum-pennai-kindal-egipthil-bayangara-kalavaram
கலவரத்தின்போது இருதரப்பினரும் எந்திர துப்பாக்கிகளால் பயங்கரமாக சுட்டுக்கொண்டனர். இந்த தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


நுபியன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்தரப்பினரின் வீடுகளை தீ வைத்து எரித்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாணி ஹலால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பாதுகாப்பு வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் வகையில் இடைக்கால பிரதமர் இப்ராகிம் மஹியாப், உள்துறை மந்திரி முகம்மதுஇப்ராகிம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கலவரத்தையொட்டி மலைவாழ் மக்கள் பகுதியில் உள்ள 17 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0 comments

Post a Comment