Saturday 3 May 2014

பஸ்டாப்பில் நின்றிருந்த பெண் கடத்தல்; ரூபாய் 5 லட்சம் கேட்டு மிரட்டல்

தாம்பரத்தில் பஸ்சுக்காக நின்ற பெண்ணை காரில் கடத்திய மர்ம ஆசாமிகள், அவரது கணவரிடம் போனில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினார்கள்.

அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியதைத்தொடர்ந்து, அந்த பெண் அணிந்து இருந்த 5 பவுன் நகை பற்றும் பணத்தை பறித்து சென்றனர்.

காரில் பெண் கடத்தல்

சென்னையை அடுத்த தாம்பரம் இரும்புலியூர் பிராமணர் தெருவை சேர்ந்தவர் சரவணன். கால் டாக்சி டிரைவர். இவரது மனைவி சாந்தி (வயது 34). இவர் தி.நகரில் ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார்.
pen-kadathal-5-lakh-ketu-mirattal


இவர் நேற்று முன்தினம் மதியம் தி.நகர் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு இரும்புலியூர் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகே ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்த 4 பேர் அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து திடீரென்று கத்திமுனையில் சாந்தியை மிரட்டி காரில் ஏற்றினர்.

ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

பின்னர் காரை கூடுவாஞ்சேரி நோக்கி திருப்பி சென்ற 4 பேரும் சாந்தியிடம் அவரது கணவர் சரவணன் செல்போன் நம்பர் வாங்கி உன் மனைவியை கடத்தி வைத்துள்ளோம் ரூ.5 லட்சம் வேண்டும் என மிரட்டி கேட்டனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்றார்.

நகை-பணம் பறிப்பு

உடனே அந்த ஆசாமிகள் சாந்தி அணிந்து இருந்த 5½ சவரன் நகைகள், ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு கூடுவாஞ்சேரி அருகே காயரம்பேட்டில் காரில் இருந்து இறக்கி தப்பி சென்று விட்டனர்.

அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் கூடுவாஞ்சேரி வந்த சாந்தி கணவருக்கு தகவல் கொடுத்தார். கணவர் சரவணன் சென்று மனைவியை அழைத்து வந்தார்.

இது தொடர்பாக தாம்பரம் போலீசில் சாந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

என்ன  கொடுமை சரவணனன் இது? கடத்தப்படறவங்க பணக்காரங்களா? இல்லையான்னு கூட தெரியாம கடத்தறாங்களே... நாடு தாங்குமா?

0 comments

Post a Comment