Thursday 15 May 2014

கத்தி படத்தில் தாடி கெட்டப்பில் கலக்கும் விஜய்

பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இவரின் டைரக்சனில் விஜய் நடிக்கும் படம் கத்தி.

விஜயின் முந்தை படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களுக்கு திருப்தியை தரவில்லை. இந்நிலையில் இந்த படத்தில், அதிக எதிர்பார்ப்பு  நிலவிவருகிறது.

ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் இப்படத்தில் விஜய் ஒவ்வொரு காட்சியிலும் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார்.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதால் கெட்டப்பில் வித்தியாசம் காட்டுவதற்காக முகம் முழுவதும் தாடி வளர்த்து, இது வரை பார்க்காத கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்.

இதில் அநாதை குழந்தைகளுக்கு உதவி செய்பவராக நடிக்கிறார்.

ஜில்லா, தலைவா படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியைப் பெற்று தராத நிலையில் கத்தியை நன்றாக தீட்டி வருகிறார்கள்.

thadi-getupil-vijay-nadikkum-kathi-thiraipadamஎப்படியும் இந்த கத்தி, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கேக்கை வெட்டிக்கொடுக்கும் என்கிறார்கள் தகவல் அறிந்த சினிமா வட்டாரங்கள்.

இதுவரை வெளிவந்த படங்களில் மிக வித்தியாசமான கதையமைப்பும், விஜயை புதுமையான கோணத்திலும் தோற்றமளித்திருக்கும் விஜய்க்கு, இது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் நம்புகின்றனர்.




0 comments

Post a Comment