திருவனந்தபுரத்தில் இருந்து கோவை செல்லும் ரெயிலில் யானை தந்தங்கள் மற்றும் சந்தன கட்டைகள் கடத்தப்படுவதாக மாநில உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். பயணிகளின் உடமைகளும் பரிசோதிக்கப்பட்டன.
அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ரெயிலில் வாலிபர் ஒருவர் அவசரமாக ஏறுவதை போலீசார் கண்டனர். உடனே அவரை மடக்கிப்பிடித்தனர்.
அவரிடம் இருந்த சூட்கேசை போலீசார் திறந்து பார்த்தனர். அதில், விலை மதிப்பற்ற யானை தந்தங்கள் இருந்தன. அதனை அந்த வாலிபர் உறவினருக்காக வயநாடு காட்டு பகுதியில் இருந்து வாங்கி செல்வதாக கூறினார்.
ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.
இதில் அவரது பெயர் ஷாஜு செபஸ்தியான். கோவையைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவர் யானை தந்தத்தை யாரிடம் இருந்து வாங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல ரெயிலின் இன்னொரு பெட்டியில் சந்தேகத்திற்கு இடமாக வைக்கப்பட்டிருந்த பார்சலை போலீசார் கைப்பற்றினர்.
அதை திறந்துபார்த்த போது, அதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான சந்தன கட்டைகள் இருந்தன. அந்த பார்சலை அங்கு வைத்தவர்கள் யார்? என விசாரித்தபோது திருவனந்தபுரம் போத்தங் காட்டைச் சேர்ந்த சாம்நாத், ஜோன்சன், பிரடி, பிரதீப் ஆகியோர் என தெரிய வந்தது.
அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் சந்தன கட்டைகளை எங்கு வாங்கினர், எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments
Post a Comment