அண்டார்டிக்கா கடலின் அதள பாதாளத்தில் இது வரை கண்டுபிடிக்கப்படாத புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
சூரிய வெளிச்சமே இல்லாத அந்த கருப்பு அடர்ந்த இருட்டான கடற்பகுதியில் அந்த உயிரினங்கள் எப்படி வசிக்கின்றன என விஞ்ஞானிகள் ஆச்சர்யப்பட்டுப்போயுள்ளனர்.
ஆக்ஸ்போர்ட் சுவுதாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, பிரிட்டிஷ் அண்டார்டிக்கா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் இடுபட்டது. அதில் தாங்கள் ஒரு உயிரனத்தொகுப்பை கண்டுபிடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய வகை ஆக்டோபஸ் போன்ற உயிரினம், நட்சத்திர வடிவிலான மீன் போன்றவைகளை கண்டுபிடிக்கப்பட்டன.
விஞ்ஞான உலகில் இது முற்றிலும் புதிய வகை உயிரினக் கண்டுபிடிப்பு என்றும், இவைகளை அசாதாரண ஆழத்தில் வசக்கின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடலுக்கடியில் உள்ள எரிமலைக்களுக்கு மேலாக அந்த உயிரினங்கள் காணப்படுகின்றன. அந்த எரிமலைகள் சீறும்போது கரும்புகையை வெளிப்படுத்தும். அப்போது வெளிப்படும் வெப்பத்தின் அளவு ஒரு காரீயத்தையே உருக்கும் அளவிற்கு மிக அதிகமானதாகும்.
எரிமலைகள் வெளிப்படுத்தும் கரும்புகையில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை உடைப்பதன் மூலம் அந்த உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியை பெறுகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.
இவைகள் மற்ற வகை நண்டுகளைப் போல் அல்லாமல் தங்களின் மார்பு பகுதியில் ரோமத்தாலான அடர்த்தியான அடுக்கைக் கொண்டுள்ளன. இதில் பாக்டீரியாவை வளர்த்து, இவை உண்ணுகின்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

0 comments
Post a Comment