Sunday 18 May 2014

பனிப்போர் ஓய்ந்தது; ஆப்பிளும், சாம்சங்கும் சமாதானம்!

அண்ணன், தம்பி சண்டையைப் போலதான், ஆப்பிளும், சாம்சங் நிறுவனமும் அடிக்கடி மோதிக்கொள்ளும்.

ஒவ்வொரு புதிய தயாரிப்பு வெளியாகும்போதும், ஒன்று மற்றொன்றின் தொழில்நுட்பத்தை காப்பி அடித்துவிட்டதாக புகார் தெரிவிக்கும்.

புகார் முற்றி, நீதிமன்றத்திற்கு விசாரணைக்குச் செல்லும்.

இதுபோன்று பல முறை நடந்திருக்கிறது. சமீபத்தில் கூட ஆப்பிள் நுட்பத்தை சாம்சங் காப்பி அடித்ததற்காக உலகிலேயே மிகப்பெரிய தொகையான அபராத தொகையை செலுத்தியிருந்தது.

தற்பொழுது ஒருவருக்கொருவர் சமாதானமாகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

samsung-apple-samathanam-seithu-kondanaசாட்சிக்காரன் காலில் விழுவதைவிட்ட சண்டைக் காரன் காலிலேயே விழுவது பெட்டர் என்று கருதியதோ என்னவோ, இரு நிறுவனங்களும் இனி சமாதானமாக போவதாகவும், ஒருவர் மீது ஒருவர் பதிந்த புகார்களை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் அடிப்படையில், நீதி மன்றத்தில் உள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நிறுவனங்களும். இனி சண்டையில்லை.. சமாதானம்  என்று கூறி, ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளன. 

0 comments

Post a Comment