Friday 16 May 2014

பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி - அ.இ.அ.தி.மு.க. சாதனை

தமிழகத்தில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்றுள்ள அ.இ.அ.தி.மு.க இந்திய அளவில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளது.

அதற்கு அடுத்த நிலையில் காங்கிரஸ் கட்சி 2-வது இடத்தை பெற்று இருக்கிறது.

காங்கிரசுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்று 3-வது பெரிய கட்சி என்ற கவுரவத்தை பெற்று இருக்கிறது.

இதன் மூலம் உலகளவில் அ.இ.அ.தி.மு.க. மிகப் பரபலமடைந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
paralumanrathil-mooravathu-periya-katchi-admk

எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வருவதற்கு தமிழக முதல்வர் செல்வி, அம்மா ஜெயல்லிதாவிற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு அலையால் மோடி அவர்களின் பாரதீய ஜனதா கட்சி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ள போதிலும், தனிப்பட்ட முறையில் பாரதீய ஜனதா கட்சிக்கான ஆதரவு இந்திய அளவில் குறைவானதாக உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


0 comments

Post a Comment