Friday 16 May 2014

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற ஒரே வேட்பாளர்

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற ஒரே வேட்பாளர் டாக்டர் திரு. பி. வேணுகோபால் தான்.

அ.இ.அ.தி.மு.க வேட்பாளரான இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான டி.ரவிக்குமாரை விட 3 லட்சத்து 23 ஆயிரத்து 430 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த தமிழக தேர்தல் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் டி.ரவிக்குமார் 3 லட்சத்து 5 ஆயிரத்து 69 வாக்குகளையும், டாக்டர் பி.வேணுகோபால் 6 லட்சத்து 28 ஆயிரத்து 499 வாக்குகளையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஒரே வேட்பாளர் என்ற சாதனையை தன் வசமாக்கிக்கொண்டார் டாக்டர் திரு. பி. வேணுகோபால் அவர்கள். 

0 comments

Post a Comment