Monday 19 May 2014

தெருவோர சுவரில் வரைந்த ஓவியத்திற்கு 1000 கோடி பரிசு: வாங்கத்தான் ஆளில்லை.!

தெருவோர சுவரில் வரைந்த ஓவியத்திற்கு 1000 கோடி பரிசு அறிவித்துள்ளது உலக ஓவிய கவுன்சில்.

பார்ப்பதற்கு மன நோயாளிபோல் இருக்கும் ஓவியர் ரவிவர்ம ராஜா.

தூத்துக்குடியைச் சேர்ந்த இவர் சுவற்றில் எழுதும் தொழிலை செய்து வந்தார்.

அந்த தொழில் நசிந்துவிட்ட பிறகு, சரியான வருமானமின்றி, மன நலம் பாதிக்கப்பட்டார்.

ஆனால் தான் கற்ற ஓவியத்தை அவ்வப்பொழுது வண்ணங்களைக் கொண்டு, சுவற்றிலும், தார் சாலைகளிலும் வரைந்து, அதன் மூலம் கிடைக்கும் சில்லறைக் காசுகளைப் பொறுக்கி வயிற்றைக் கழுவிக்கொண்டு வந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டதால், இவர்கள் குடும்பத்தினர், இவரை விட்டு வெளியூறு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அவர் வரைந்த ஓவியத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சன்சன் பீட்ரிக் தமிழ்நாடு வந்திருந்தபோது கண்டு ஆச்சர்யப்பட்டார்.

அவரின் புகைப்படக் கருவியின் மூலம் படமெடுத்து அதை, ஓவியப்போட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு, தற்பொழுது இந்த ஓவியத்தை உலக ஓவிய கவுன்சில் அற்புதமான படைப்பாக அங்கீகரத்து 1000 கோடி ரூபாய் பரிசை அறிவித்துள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்டவரை கண்டறிய முடியாத்ததால், அப்பரிசை இந்தியாவில் இருக்கும் அநாதை இல்லங்களுக்கு பகிர்ந்தளிக்க இருப்பதாக அக்கவுன்சிலின் தலைமை இயக்குனர் ஜெம்மின்ராட்ஸ் தெரிவித்துள்ளார்.


0 comments

Post a Comment