Tuesday, 20 May 2014

சத்தியமா அது நான் இல்லை நம்பாதீங்க - அதிர்ச்சியில் அசின்!

நடிகர் விஜய் முதல் சூர்யா வரை தமிழின் முன்னணி நடிகர்களுக்குடன் இணைந்து நடித்தவர் நடிகை அசின்.

இவரைப் போலவே இருக்கும் ஒருத்தி, ட்விட்டர் தளத்தில் நடிகை அசின் பெயரில் கணக்கு தொடங்கியிருக்கிறாள்.

கணக்கு தொடங்கியது மட்டுமல்லாமல், அசின் பெயரில் அரட்டை அடிக்கவும், பிரபல நடிகர்களுடன் இணைந்து பேசவும் செய்திருக்கிறாள்.

உண்மையிலேயே அசினைப் போன்றே உள்ள இவள், அசினின் குரலைப் போல மாற்றி பேசி, மற்றவர்களை நம்ப வைத்துள்ளாள்.

athu-naan-alla-katharum-asinகுறிப்பாக இந்தி நடிகர்கள் அபிஷேக் பச்சன், ரிதேஷ் தேஷ்முக் போன்றோரிடமும் அசின் பேசுவது போலவே தொடர்பு வைத்து உரையாடியிருக்கிறாள்.

ரிதேஷ் தேஷ்முக் இந்த மோசடியை தற்போது அம்பலபடுத்தி உள்ளார்.

அசின் டுவிட்டரில் இல்லை. அவர் பெயரில் மோசடி நடக்கிறது என்று கூறியுள்ளார்.

இது அசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் அதிர்ச்சியானார். சமூக வலைத்தளங்களில் என் பெயர் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் ரசிகர்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் என்றும் அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அசினுக்கு ரசிகர்கள் உள்ளனர். எனவே இந்த ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் யார் தொடர்புகொண்டு அசினைப் போன்று பேசினாலும் நம்ப வேண்டாம் என அசின் தெரிவித்துள்ளார்.


0 comments

Post a Comment