விபத்துக் காலங்களில் உயிருக்குப் போராடுபவர்களை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாறும் அளப்பரிய பணியை செய்வது 108 அவரசகால சிகிச்சை ஊர்தி.
சுண்டுவிரலில் சிறிய அளவு காயம் ஏற்பட்டிருந்த அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபோன்ற சிறிய காயங்களுக்கெல்லாம் 108 ஆம்புலன்சை அழைப்பது தவறு என்று எச்சரித்தனர்.
அதை சிலர் தவறாக தகவல் கொடுத்து வரவழைத்து, அதில் கீழ்த்தரமான மகிழ்ச்சி அடைவதும் உண்டு. அந்த வகையில் இன்று நாமக்கல் நல்லிபாளையில் ஒரு சம்பவம் நடந்தது.
டிக்கடை வைத்திருக்கும் ஒருவர் கடையின் பின்னால் இருக்கும் முள்வேலி செடிகளை அறிவாளால் வெட்டும்போது, சுண்டு விரலில் வெட்டிக்கொண்டார். இதைப் பார்த்த அருகில் இருந்த ஒருவர் அறிவாளால் வெட்டி கையில் இரத்தம் நிற்காமல் வருகிறது என்று 108 க்கு போன் செய்துள்ளார்.
உடனே விரைந்த வந்த 108 ஆம்புலன்ஸ், வெட்டுப்பட்டவரை பார்த்தவுடன், அதிர்ச்சி அடைந்தது.

அந்த வழியே வந்த போக்குவரத்து காவல்துறையினரும், அங்கிருந்த பொதுமக்களும் அந்த டீக்கடைக்காரரை எச்சரித்தனர்.
அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய எண்ணை தவறாக பயன்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
0 comments
Post a Comment