Tuesday 13 May 2014

அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் பஸ் மோதி விபத்து: அப்பாவிகள் பலி

சில நேரங்களில் தொடர்ப்பில்லாத சிலர் வாகன விபத்தில் சிக்குவதுண்டு. அதுபோலதான் இந்த சம்பவமும்.

திங்கள்கிழமை சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ரத்தினகுமார்  ஓட்டினார்.

அதே பகுதியைச் சேர்ந்த தினகரன்  நடத்துநராக இருந்தார். இந்நிலையில் கூடுவாஞ்சேரியை அடுத்த சீனிவாசபுரம் அருகே சென்றபோது அவ்வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள்களின் மீது அடுத்தடுத்து மோதியதால் ஒரு மோட்டார் சைக்கிள் பஸ்ஸின் அடியில் சிக்கி அப்பளமாக நசுங்கியது.

மேலும் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலைத் தடுப்பு கம்பிகளை உடைத்துச் சென்றதுடன் அங்கிருந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தையும் சாய்த்தது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுபோன்ற சம்பவங்களில் அப்பாவி மக்களும் சிக்கி உயிரை விடுகின்றனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

but-motor-cycle-mothal-4var-savuசிலசமயம் உயிர்களுக்கு மதிப்பே இருப்பதில்லை. எதிர்பாராத சமயத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பாதல் சற்று முன் நம்முடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் கூட, உயிரற்ற ஜடமாக, இயக்கமற்று, இரத்த கசிவுகளுடன் கண்முன்னே கிடப்பதை காண சகிக்காது.

உயிழப்புகளால், அவர்களது குடும்பத்தின் நிலையும் சில சமயங்களில் அப்படியே தலைகீழாக புரட்டிப்போடப்படுகிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

0 comments

Post a Comment