Monday 19 May 2014

நடிகையின் பாவாடைக்குள் புகுந்த பத்திரிகையாளர்; நடிகை அதிர்ச்சி [காணொளி]

கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ்நாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறப்பு மிக்க இந்த திரைப்பட விழாவில் உலகெங்கும் உள்ள முக்கிய திரைப்பட நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த விழாவில் சில முக்கியமான திரைப்பட நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து மரியாதை செய்யப்படுகிறது.

இந்நிலையில் விழாவில் கலந்துகொண்ட திரைப்பட நடிகை America Ferrara தேவதையைப் போல வெண்மைநிற ஆடையுடன் வந்து கலந்து கொண்டார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மரியாதை ஏற்றுக்கொண்டு, சிவப்பு கம்பளத்தில் அவர் ஒய்யாரமாக நடந்து வரும்பொழுது, திடீரெ உக்ரைன் பத்திரிகையாளர் ஓடிச்சென்று அவர் பாவாடைக்குள் புகுந்தார்.

பாவைடைப் போன்ற கவுன் பகுதியை விலக்கி அதற்குள் புகுந்து உட்கார்ந்தார். இதனால் அதிர்ச்சி பயந்துபோய் அதிர்ச்சி அடைந்த நடிகை அலறினார்.

இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த செக்யூரிட்டிகள் உடனடியாக செயல்பட்டு, அவரை பாவைக்குள்ளிருந்து இழுத்து வந்து விழா அரங்கத்திலிருந்து வெளியேற்றினர்.

இந்த சம்பவத்தினால் விழா மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகையை விழாக்குழுவினர் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினர். என்றாலும் நடிகையின் முகத்தில் பயம் கலந்த அதிர்ச்சி நீங்கமால் அப்படியே இருந்தது.


இதே பத்திரிகையாளர் திரைப்படவிழாவில் நடிகர் ஒருவரை முத்தமிட முயன்றபோது, அந்த நடிகரால் தாக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவிற்கு தென்னிந்திய நடிகர்கள் , உலக நாயகன் கமலஹாசனுடன் கலந்துகொண்டிருக்கின்றனர் என்று கூடுதல் தகவல்.

காணொளி காட்சி:

0 comments

Post a Comment