Friday 16 May 2014

மோடிக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் அமெரிக்கா

இலைமறை காயாக ஒருவர் ஒரு குற்றச்செயலின் பின்புலத்தில் இருந்தாலும், அவர் செய்யும் நல்லைப் பொறுத்து அந்த குற்றமானது மறக்கடிக்கப்படும். இது சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி நடைமுறையில் உள்ள உண்மை. அதுபோன்றுதான் இந்த செய்தியும்.

குஜராத்தில் நடைப்பெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் சம்பவம் மற்றும் அதன் எதிரொலியான கலவரங்களை மனித உரிமை மீறல் என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த 2005-ம் ஆண்டு அந்நாட்டிடம் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் கறுப்புப் பட்டியலில் மோடியின் பெயரை இணைத்து அறிவிப்பு வெளியிட்டது.

இதன்பிறகு, பல சந்தர்ப்பங்களில் மோடிக்கு அமெரிக்க விசா வழங்குவது தொடர்பாக பட்டும்படாமல் பேசி வந்த வெள்ளை மாளிகை அதிகாரிகள், ‘விசா கேட்டு மோடி விண்ணப்பித்தால், ஏனைய விண்ணப்பங்களைப் போலவே அவரது விண்ணப்பமும் உரிய முறையில் பரிசீலிக்கப்படும்.

விசா வழங்கப்படுமா? என்பது தொடர்பாக உத்திரவாதம் அளிக்க முடியாது’ என்று “கழுவிய மீனில் நழுவிய மீன்” பாணியில் பதில் அளித்து வந்தது.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா சுதாரித்துக் கொண்டது. இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதர் நான்சி பவெல், கடந்த பிப்ரவரி மாதம் குஜராத் தலைநகர் அகமதாபாத்துக்கு வந்து மோடியை சந்தித்துப் பேசியது திருப்புமுனையாக கருதப்பட்டது.

நேற்று முதல் வெளியாகி வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி, பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதும், நரேந்திர மோடி நாட்டின் பிரதமராவதும் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கர்னி, ‘வரலாற்று சிறப்பு மிக்க இந்த தேர்தலில் பெரும்பானமை இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வையும், நரேந்திர மோடியையும் நாங்கள் வாழ்த்துகிறோம்.

புதிய ஆட்சி அமைந்ததும், பிரதமர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையுடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்நோக்குகிறோம். இந்தியப் பிரதமரின் வருகையை அமெரிக்கா வரவேற்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

modikku-sivappu-kambalam-virikkum-americaபிரதமர் ஆவார் என்று தெரிந்த்தும் தனது நிலைப்பாட்டை தற்பொழுது அமெரிக்கா முழுவதுமாக மாற்றிக்கொண்டது. மோடிக்கு விசா வழங்குவது மட்டுமல்ல.. அமெக்காவில் குடியுரிமை வழங்குவதற்கும் தற்பொழுது தயாராக இருப்பதாக கேள்வி.

ஒரு மனிதனின் முன்னேற்றம், அவனது பிந்தைய நிலைகளை மறக்கடிக்கச் செய்வதோடு, அவனது தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் மனிதர்கள் நடந்துகொள்வார்கள் என்பது இச்சம்பவத்தின் மூலம் அறியப்படுகிறது.

0 comments

Post a Comment