Friday 16 May 2014

கன்கிராட்ஸ் மோடி - பராக் ஒபாமா வாழ்த்து!

மோடி பிரதம வேட்பாளராக அறிவித்ததிலிருந்தே மோடி மீதான நடவடிக்கைகளிலிருந்து அமெரிக்கா தன்னிலை மீதான பிடிவாதத்தை தளர்த்தி இருந்தது.

நேற்று நடந்து முடிந்த தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை அடுத்து, இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிதான் என்பது உறுதியாகிவிட்டது.

இந்திநிலையில் மோடிக்கு அமெரிக்க அதிபர்  ஒபாமா போன் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொலைபேசி உரையாடலின்போது, உலக பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா ஆற்றவுள்ள பங்களிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.

இந்திய வாக்காளர்கள் வழங்கியுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்த ஒபாமா, சர்வதேச அரங்கில் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக ஒருவருக்கொருவர் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர்.
modikku-valthu-therivitha-obama

மோடி மிகச்சிறந்த பிரதமராக இருப்பார் என பலதரப்பு மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் உலக தலைவர்கள் பலரும் மோடிக்கு வாழ்த்துச் செய்திகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவின் எதிர்காலம் மோடி தலைமையிலான புதிய ஆட்சியில் உள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவாரா என்பது வரும் ஐந்தாண்டுகளில் நடைபெறவுள்ள ஆட்சியின் தன்மையைப் பொறுத்து இருக்கும் என அரசியல் வல்லுநனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

0 comments

Post a Comment