Friday, 16 May 2014

பிரதமராகும் மோடி; நாட்டை விட்டு வெளியேறிய நடிகர் - பரபரப்பு தகவல்கள்

மோடி பிரதமரானால் ட்விட்டரில் இருந்து மட்டுமல்ல நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கடந்த ஆண்டு சவால் விட்டார் நடிகர் கமால் ஆர்.கான். லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.

ஊடகங்களில் இந்த தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் சொன்னது போலவே நாட்டை விட்டு வெளியேறுவதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் கமால்ஆர்.கான் இதேபோல மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவதாக இன்னும் சிலர் கூறியுள்ளனர்.

மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று பிரபல கன்னட எழுத்தாளரும் ஞானபீடம் விருது பெற்றவருமான கர்நாடகத்தைச் சேர்ந்த யூ.ஆர்.அனந்த மூர்த்தி கூறியிருந்தார்.

அதேபோல முன்னாள் பிரதமர் தேவகவுடாவோ, பாஜக பெரும்பான்மை பெற்றால் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவேன் என்றும், மோடி பிரமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறுவேன் என்றும் சவால் விட்டிருந்தார். சொன்னதை செய்த நடிகர் ட்விட்டரில் சவால் விட்டதுபோலவே நடிகர் கமால் இன்று ட்விட்டர்

பக்கத்தில் குட்பை சொல்லிவிட்டு வெளியேறப்போவதாக கருத்து வெளியிட்டுள்ளார். விமான நிலையத்தில் இருந்து இந்த தகவலை ட்விட்டரில் கூறியுள்ளார். எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தி மோடி பிரதமரானால், அப்படி ஒரு சம்பவம் நடைபெறுமானால் நான் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று தெரிவித்தார்.
 யூ.ஆர்.அனந்த மூர்த்தி. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராவதை நான் விரும்பவில்லை என்றும் மோடிக்கு நாடாளும் அதிகாரம் கிடைத்தால் மஹாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் கனவு கண்ட இந்தியாவை பிறகு ஒரு போதும் காண இயாலமல் போய்விடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மக்களுக்கு அச்ச உணர்வு மோடி ஆளும் இந்தியா என்பது ஜனநாயகம் போற்றும் நாடாக இருக்காது.மோடிக்கு பயந்து மக்கள் உயிர் பாதுகாப்பு தேடி ஓடும் கொடும் காலமாக தான் அது இருக்கும் என்றும் யூ.ஆர். அனந்த மூர்த்தி தெரிவித்திருந்தார்.

அரசியலில் இருந்து ஓய்வு முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசும் போது, பாரதிய ஜனதா கட்சி லோக்சபா தேர்தலில் 272 தொகுதிகளைக் கைப்பற்றினால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன். பாரதிய ஜனதா கட்சியால் பெரும்பான்மையை பெற முடியாது என்று சவால்விட்டார்.

கர்நாடகாவை விட்டு வெளியேறுவேன். தாம் பிரதமராவோம் என்று நரேந்திர மோடி கனவு காண்கிறர். அப்படி மோடி மற்றும் பிரதமராகிவிட்டால் நான் கர்நாடகாவைவிட்டு வெளியேறி வேறு ஏதோ ஒரு இடத்தில் குடியேறுவேன் என்றும் கூறியிருந்தார் தேவகவுடா. சொன்னதை செய்வார்களா? ஒருவர் சொன்னதை செய்துவிட்டார். மற்றவர்கள் சொன்னதை செய்வார்களா?

0 comments

Post a Comment