Tuesday 13 May 2014

மனைவி காலை வெட்டி எடுத்த கணவன் கைது

குடும்பங்களில் சண்டை ச்சசரவு வருவது இயல்புதான். என்னதான் கருத்தொற்றுமையுடன் வாழ்க்கை நடத்தினாலும் சில சமயங்களில் கருத்து முரண்பட்டுவிடுவது எங்கும் நடக்கும் ஒன்றுதான்.

அவ்வாறு கருத்து முரண்பட்டாலும், அதை பேசி தீர்த்து, மீண்டும் இயல்பு நிலைக்கு மாறுவதுதான் குடும்பம்.

அப்படியில்லாமல் மிருகத்தனமாக நடந்துகொள்வதும், கணவன், மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அடித்து வெட்டிக்கொல்வது தேவையில்லாத ஒன்று.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியின் காலை வெட்டி தனியே எடுத்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி மகள் இசக்கியம்மாள் (27). இவருக்கும் படிக்காசுவைத்தான்பட்டி பேச்சிமுத்து (30) என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உண்டு.

பேச்சிமுத்து மில் கூலி தொழிலாளி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது. இதனால் இசக்கியம்மாள் தனது தாய் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சென்றுவிட்டார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை கொத்தங்குளம் சென்ற பேச்சிமுத்து, சாலையில் சென்று கொண்டிருந்த தனது மனைவி இசக்கியம்மாளை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் அவரது ஒரு கால் மற்றும் ஒரு கையின் மணிக்கட்டு தனியே வந்தது. இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கால் மற்றும் மணிக்கட்டை தனியே ஒரு பாலித்தின் பையில் போட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இசக்கியம்மாளை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இசக்கியம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் பேச்சிமுத்துவைக் கைது செய்தனர்.

குடும்ப பிரச்னைகளால் இதுபோன்ற வக்கிரமான, வன்மையாக செயல்களை செய்வதை விட்டுவிட்டு, சரியான வழிமுறையில் பேசித்தீர்த்து, பிழைப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும். அதுதான் நல்லதும்கூட.




0 comments

Post a Comment