Tuesday 13 May 2014

கணவனுக்கு பயந்து ஓடிய இளம் மனைவி கள்ளக்காதலுடன் கிணற்றில் விழுந்து படுகாயம்

கையும் களவுமாக பிடிப்பட்ட கள்ளக்காதல் ஜோடி கணவனிடமிருந்து தப்பி ஓடும்போது, தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தனர்.

கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அவர்களின் கால்கள் முறிந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த காளிகோயில் அருகே உள்ள சின்னகிணறு பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருபவர் துர்வாசன் (39).

இவரது மனைவி மலர்க்கொடி (30). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் துர்வரசன் மனைவி மலர்க்கொடிக்கு பால் நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக பணிபுரியும் வேலன்(35) என்வருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர்.

இது குறித்து அறிந்த அதிர்ச்சியடைந்த துர்வாசன், சில நாட்களுக்கு முன்பு மனைவியை கண்டித்துளளார். அப்போது மலர்கொடி  தனக்கும் வேலனுடன் பழக்கம் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார்.

இதை ஏற்க மறுத்த துர்வாசன் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார். அங்கு, தனது கணவர் அபாண்டமாக பொய் புகார் கூறுவதாக மலர்க்கொடி தெரிவித்தார்.

உடனே ஊர்க்காரர்கள், தூர்வாசனிடம் உன் மனைவி மீது அபாண்டமாக குற்றம் சாட்ட கூடாது. உனக்கு அவர் மீது சந்தேகம் இருந்தால் கையும் களவுமாக பிடித்து வா எனக் கூறியுள்ளனர்.

kanavanidam-thappithu-odiya-kallakathalargal-kinatril-vilunthu-padukayamஇதையடுத்து துர்வாசன், கள்ளக்காதலனுடன் மனைவியை பிடிக்க திட்டமிட்டார். அதன்படி அவர் நேற்றிரவு தனது மனைவியிடம் தான் சின்னக்கிணறு பகுதிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால் அவர் அங்கு செல்லாமல் வீட்டின் அருகே மறைவான இடத்தில் பதுங்கி இருந்தார்.

 இந்நிலையில் நள்ளிரவில் ஊருக்கு சற்று வெளியே பால் வேனை நிறுத்தி விட்டு ஓட்டுனர் வேலன் தனது கள்ளக்காதலியை சந்திக்க வீட்டிற்கு சென்றார்.

இதை கவனித்த தூர்வாசன், வேலனை பின் தொடர்ந்து வந்துள்ளார். வீட்டில் இருவரும் தனிமையில் இருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த துர்வாசன், கூச்சலிட்டபடி ஓடிவந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கள்ளக்காதல் ஜோடி துர்வாசனிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓடினர். ஆனாலும் துர்வாசன் இருவரையும்  விரட்டினார். அவரிடம் சிக்காமல் இருக்க விரைவாக ஓடிய கள்ளக்காதல் ஜோடி, எதிர்பாராதவிதமாக  60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.

கிணற்றில் தண்ணீர் இல்லாததால், உள்ளே விழுந்த வேகத்தில் இருவரின் கால்கள் முறிந்தன. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் அங்கு திரண்டனர்.

இதுபற்றி தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒழுக்கத்துடன் இருந்தால் எந்த துன்பமும் வந்து உங்களை தாக்காது. நல்லவள் போல் பஞ்சாயத்தாரிடையே நடித்தவளுக்கு, சரியான தண்டனை கிடைத்துவிட்டது.




0 comments

Post a Comment