Friday, 2 May 2014

அறுபதிலும் காதல் வரும்; இணையத்தை கலக்கும் பிரபல அரசியல்வாதியின் காதல் படங்கள்

திக்விஜய்சிங்கை கரம் பிடிப்பதற்காக அம்ரிதாராய், அவரது கணவரின் பூரண சம்மதத்தை பெற்றுவிட்டார்.

அவரை விரைவில் விவாகரத்து செய்துவிட்டு திக்விஜய்சிங்கை திருமணம் செய்ய உள்ளார், அம்ரிதாராய். திக்விஜய்சிங்கும் அம்ரிதாராயும் ஒன்றாக இருக்கும் படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன.

kathal-padangal


67 வயதான காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்கிற்கும், 43 வயதான தொலைக்காட்சி பெண் நிருபர் அம்ரிதாராய்க்கும் காதல் மலர்ந்தது.

இதை இருவருமே டுவிட்டரில் ஒப்புக் கொண்டனர். திக்விஜய்சிங்கின் மனைவி ஆஷா, புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு இறந்தார். அவருக்கு 4 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

மகன் ஜெய்வர்தன், மத்தியபிரதேசம் ரகோகார் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவரிடம் தந்தையின் காதல் திருமண விஷயம் குறித்து கேட்டபோது, ‘இது எனது அப்பாவின் சொந்த விஷயம்.

அதுகுறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. என்னுடைய அப்பாவுக்கு எனது முழு ஆதரவு உண்டு’ என்று ஜெய்வர்தன் பதில் அளித்தார்.

0 comments

Post a Comment