Wednesday 7 May 2014

மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை துல்லியமாக கண்டிறிந்த நியூசிலாந்து விமானப்படை விமானம்

இதோ அங்கிருக்கிறது.. அதோ அந்த இடத்தில் விழுந்திருக்க கூடும் என ஓரளவுக்கு யூகமான செய்திகளையே கேட்டறிந்த மக்களுக்கு, நியூசிலாந்து விமானப்படை விமானம், மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியை கண்டுபிடித்துள்ளதாக தகவல்களைத் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு 1500 கி.மீ தொலைவில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாகவும், அந்த பகுதியில்தான் மலேசிய விமானம் MH370 விபத்துக்குள்ளாகி நொறுங்கியிருக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமரும், மற்ற நாட்டின் தொழில்நுட்ப அறிஞர்கள் உறுதியாக கூறினர்.
malasia-vimanam-viluntha-idathai-kandupidatha-newzeland-vimanam

இதையடுத்து உலக நாடுகளின் மீட்புப்படை அந்த பகுதியை நோக்கி விரைந்தன.


இந்நிலையில் தற்போது நியூசிலாந்து நாட்டின் விமானப்படை விமானம் மலேசிய விமானம் விழுந்த இடத்தை மிகத்துல்லியமாக கண்டுபிடித்துள்ளது.

 இந்த இடம் ஆஸ்திரேலிய, மற்றும் தாய்லாந்து சாட்டிலைட் குறிப்பிட்ட இடத்தில் இருந்து 1,100 கி.மீ தூரம் தள்ளி இருக்கின்றது.

நியூசிலாந்து நாட்டின் Air Force Orion என்ற விமானப்படை விமானம் மலேசிய விமானம் விழுந்த இடத்தை மிகத்துல்லியமாக கண்டுபிடித்துவிட்டதாக அங்கிருந்தபடியே தங்கள் நாட்டு ராணுவ தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இன்னும் சற்று நேரத்தில் அந்த இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ராணுவ தலைமையகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தை தேடும் மீட்புப்படையினர்களுக்கு  இந்த செய்தி மிகவும் புதிதாக இருப்பதால், மேலும் சில தகவல்களை நியுசிலாந்து ராணுவம் வெளியிடும் வரை காத்திருப்பதாக கூறியுள்ளது.

இந்த தகவலால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமானம் கடலுக்கடியில் உள்ளதை கண்டுபிடிப்பட்டால் அந்த பெருமை நியூசிலாந்து விமானப்படை விமானத்திற்கே சொந்தமாகும்.

அது பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்களை மிக விரைவில் நியூசிலாந்து விமானப்படை விமானம் தனது இராணுவத்தின் மூலம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments

Post a Comment