Wednesday 7 May 2014

மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டி எங்கே? உண்மையிலேயே விமானம் விபத்துக்கு உள்ளானதா? தொடரும் மர்மங்கள்..!


மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டி எங்கே? உண்மையிலேயே விமானம் விபத்துக்கு உள்ளானதா? மர்மங்கள் தொடர்ந்தகொண்டே உள்ளன.

இந்நிலையில் காணாமல் போன் மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றுவருகின்றன.

விமான விபத்துப் பற்றிய முழுமையான தகவல்கல் கிடைக்கப்பெறாமல் போனாலும், விமானம் காணாமல் போய் மூன்று வாரங்கள் ஆனதால், கடலில் விழுந்து விமானத்தில் உள்ளவர்கள் உயிருடன் இருக்க சாத்தியமில்லை.

என்றாலும் விமானப் பயணிகளின் உறவினர்கள் இத்தகவல்களை முழுமையாக நம்பாமல் மறுக்கின்றனர். எப்படியும் அவர்கள் உயிருடன் திரும்பவிடுவார்கள் என நினைக்கின்றனர். இதற்கிடையே விமானத்தில் மலேசிய தமிழர் ஒருவரும் பயணம் செய்திருப்பதாக புதிய தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது.

31 வயதுள்ள அப்பயணியின் தந்தை எப்படியும் தன்னுடைய உயிருடன் திரும்பி வந்துவிடுவான் என்று பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

malasiya-vimanathin-karuppu-petti-enge-thodarum-marmam


விமானம் விபத்தில் சிக்கியிருந்தால், அதனுடைய சிதைவுகளையாவது,  விமானத்தின் சிதைந்த பகுதிகளையாவது கண்டுபிடித்திருக்க வேண்டும். அதுவும் இன்னும் நடக்கவில்லை. வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

செயற்கைகோள் மற்றும் ராடார் தகவல்களின் அடிப்படையில் கூட இன்னும் விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தை அடைந்து, விமானத்தைப் பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை.

சில நேரங்களில் வெளிவரும் தகவல்களைப் பார்க்கும்போது, ஒரு வேளை விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லையோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இப்படித்தான் விமானப் பயணிகளின் உறவினர்கள் ஒரு சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். 

விமானம் விபத்தில் சிக்கவில்லை. அனைவரும் உயிருடன் வந்துவிடுவார்கள் என்ற செய்தியை இன்னும் கூட சிலர் எதிர்பார்க்கின்றனர். 

ஆனால் கிடைத்த தகவல்கள் மற்றும் கடந்துபோன நாட்களின் அடிப்படையில் அப்படி எதுவும் நடக்காது என்பதே தற்போதைய சூழல்.

கருப்புபெட்டி: 

விபத்துக்கு உள்ளாகிய விமானத்தைப் பற்றிய தகவல்களை அறியப்பயன்படும் முக்கியமான பகுதி, விமானத்தில் உள்ள கருப்பு பெட்டி.

இதற்கு முன்பு விபத்துக்கு உள்ளான விமானங்கள், எக்காரணத்தால் விபத்துக்கு உள்ளானது என்பதை, அந்த விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருப்பு பெட்டியின் மூலமே அறியப்பட்டன.

கருப்பு பெட்டி என்றாலும், இதனுடைய நிறம் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். அதேபோல் எந்த ஒரு மோசமான விபத்து என்றாலும், தீ மற்றும் விழுந்த அதிர்வுகளால் இப்பெட்டி சேதமடையாத வகையில் இதனுடைய கட்டமைப்பு இருக்கும்.

எனவே விமானம் எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும், இக் கருப்பு பெட்டி மட்டும் சேதமடையாமல் முழுமையாக கிடைக்கும். இதை வைத்து விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து வெளியிடுவர்.

விமானம் புறப்பட்டது முதல் கடைசி நிமிட தகவல்கள் வரை இப்பெட்டியில் ரெக்கார்ட் ஆகியிருக்கும்.

இதைக் கண்டுப்பிடித்தால் கூட விமான விபத்துப் பற்றிய விரிவானதகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

கடலுக்கடியில் மூழ்கியுள்ளதாக கருத்தப்பட்டும் மலேசிய விமானம் mh370 - ன் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க தற்பொழுது அதற்கே உரிய சிறப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய கப்பல் ஆஸ்திரேலியாவை அடைந்துவிட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இன்னும் ஓரிண்டு நாட்களில் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தால் மட்டுமே விபத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும். இல்லையென்றால் விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் உள்ள பேட்டரி தீர்ந்துவிடும். இதனால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்தால் மட்டுமே விமான விபத்திற்கான மர்ம முடிச்சு அவிழ்க்கப்படும்.

விரிவான செய்தி: 

காணாமல் போன மலேசிய விமானத்தில், மலேசிய தமிழர் ஒருவர் பயணித்துள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது.

மலேசியாவின், கோலாலம்பூர் நகரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீனாவின், பீஜிங் நகரை நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது.

மூன்று வாரங்களாகியும், இந்த விமானத்தின் கதி என்னவானது என்பது, இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. 'இந்திய பெருங்கடலில், இந்த விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம. அதனால், அதில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை' என, மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில், சென்னையை சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டு தமிழரான, முக்தேஷ் என்பவர் உட்பட, 239 பேர், பயணித்துள்ளனர்.

பிரிட்டன் செயற்கைகோள் அளித்த சிக்னல் தகவலின் அடிப்படையில், இந்த விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளானதாக கருதப்படுகிறது.

இனிமேலும் பயணிகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த விமானத்தில் பயணித்தவர்களுக்கான இறுதி சடங்குகள், நடைபெற்று வருகின்றன.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், டாவோயிஸ்ட், புத்த மதத்தினர் என, பலதரப்பட்ட பயணிகள், இந்த விமானத்தில் பயணித்துள்ளதால், அவரவர் மத சம்பிரதாயப்படி, இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

'இறந்தவர்களின் உடல் கிடைக்காவிட்டால் பரவாயில்லை' என, கிறிஸ்தவர்களும், புத்த மதத்தினரும், இறுதி சடங்குகளை நடத்தி வருகின்றனர்.

'இறந்தவர்களின் உடல் கிடைத்தால் தான், சடங்குகளை செய்வோம்' என, முஸ்லிம்கள் கூறியுள்ளனர்.

மலேசியாவில் வசிக்கும் தமிழர், சுப்பிரமணியம் என்பவர் குறிப்பிடுகையில், ''என் மகன், புஷ்பநாதன், 34, இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் உயிரோடு திரும்புவார் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது,'' என்றார்.

மலேசிய பல மதங்களின் கவுன்சில் தலைவர், ஜாகிர் சிங் குறிப்பிடுகையில், ''விமானத்தில் பயணித்தவர்களுக்கு அரசு சார்பில் நினைவாஞ்சலி நடத்துவதற்கு முன், பயணிகளின் உறவினர்களது சம்மதத்தை பெறுவது அவசியம்,'' என்றார்.

விமானம் விபத்துக்குள்ளானால், அது தொடர்பான முழு விவரங்களையும், 'கருப்பு பெட்டி' மூலம் அறியலாம். பெயருக்கு இதை கருப்பு பெட்டி என, அழைத்தாலும், இது ஆரஞ்ச் நிறத்தினாலானது.

விமானத்தின் வேகம், சென்ற திசை, விமானிகள் அறையில் நடந்த உரையாடல் உள்ளிட்ட, 25 மணி நேர தகவல்கள், இந்த, 'டேட்டா ரெக்கார்டரில்' பதிவாகியிருக்கும்.

இந்த கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் உரையாடல்களை, நேரடியாக கேட்க முடியாது. அதற்குரிய உபகரணத்தை பயன்படுத்தி தான், அறிய முடியும்.

கருப்பு பெட்டியில் பயன்படுத்தப்படும், 'பேட்டரி' யின் திறன், ஒரு மாதத்தில் காலாவதியாகி விடும். இதன் படி, 8ம் தேதியிலிருந்து கணக்கு பார்த்தால், அடுத்த மாதம், 8ம் தேதிக்குள் பேட்டரி காலாவதியாகி விடும்.

மேலும் ஐந்து நாட்கள் வரை, பேட்டரி உழைக்க வல்லது. எனவே, வரும், 12ம் தேதிக்குள் கருப்பு பெட்டி கிடைத்தால் தான், விபத்துக்குரிய தகவல்கள் தெரியவரும். கருப்பு பெட்டியை தேடும் அமெரிக்க கப்பல், ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளது.

13 கி.மீ., சுற்றளவு, 15 ஆயிரம் அடி ஆழத்திற்குள், கருப்பு பெட்டி விழுந்திருந்தால், அதை, இந்த கப்பலில் உள்ள கருவி மூலம், கண்டறிந்து விடலாம்.

கருப்பு பெட்டி கிடைக்குமா? விமான விபத்திற்கான காரணம் தெரியுமா? என உறவினர்களும், உலகின் பல்வேறு மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விபத்து நடந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டதால் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்தால் மட்டுமே விபத்துப்பற்றிய விபரங்கள் தெரியவரும்..

இல்லையென்றால் மாயமான விமானத்தைப் போன்றே, தகவல்களும் மாயமாகவே மறைந்துவிடும்.

0 comments

Post a Comment