Wednesday 7 May 2014

விமான கருப்பு பெட்டி அமெக்கா பயணம்; விபத்துப் பற்றிய விபரங்கள் விரைவில் தெரியவரும்..!

இந்திய விமானப் படையில் C130J எனும் சூப்பர் ஹெர்குலஸ் விமானம் கடந்த வெள்ளியன்று மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் அருகே விழுந்து நொறுங்கியது.

அதில் ஐந்து விமானப் படை அதிகாரிகள் பலியாயினர். இந்த விமான விபத்திற்கான காரணத்தை 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து அறிக்கை தரப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்தது.

விமானி அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும் கருப்பு பெட்டி கடுமையாக சேதம் அடைந்திருப்பதால் விபத்துக்கான காரணத்தை கண்டறிவதில் தற்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
vimanathin-karuppu-petti-america-payanam



இதையடுத்து விமானத்தை தயாரித்து அளித்த அமெரிக்க நிறுவனமான லாக்டிட்மார்ட்டின் நிறுவனத்திற்கு கருப்பு பெட்டியை ஞாயிறன்று அதிகாலை அமெரிக்கா சென்ற விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருப்பு பெட்டியில் பதிவாகியிருக்கும் உரையாடலை நாம் கண்டறிய முற்படும்போது, சில விவரங்கள் அழிந்துபோகவும் வாய்ப்பு இருப்பதை கருத்திக்கொண்டு, கருப்பு பெட்டியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டதாக விமானப் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கருப்பு பெட்டியில் உள்ள உரையாடல் விபரங்களை கண்டறிய ஏற்பட்டுள்ள தாமத்த்தால் அந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கை அளிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இராணுவ வீரர்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு பயன்படுத்தபடும் சூப்பர் ஹெல்குலஸ் வகைச்சேர்ந்த ஆறு விமானங்கள் அண்மையில்தான் இராணுவ பயன்பாட்டுக்காக சேர்க்கப்பட்டது என்பதும், விமானப் படையின் தேவையைப் பொறுத்து, மேலும் ஆறு விமானங்களை உருவாக்க அமெரிக்க நிறுவனத்திடம், இராணுவ அமைச்சகர் ஆர்டர் கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment