Monday 12 May 2014

மின்சார பேட்டரியின் மூலம் இயங்கும் உலகின் முதல் விமானம்

மின்சார பேட்டரியின் மூலம் இயங்கும் உலகின் முதல் விமானம் வெற்றிகரமாக வானத்தில் பறக்க வைக்கப்பட்டது.

பெட்ரோலில் இயங்க கூடிய விமானங்கள்தான் இன்று பெருமளவில் பயன்பாட்டில் உள்ளன.

பெட்ரோலுக்கு பதில் மின் சக்தியின் மூலம் ஒரு விமானத்தை இயக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கிலுள்ள போர்டாக் நகருக்கு அருகில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இஃபன் E-Fun என்று அழைக்கபடக்கூடிய சிறிய ரக விமானம் மின்சக்தியின் மூலம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

இந்த வகை விமானத்தால் எரிபொருள் செலவு,  சுற்றுச்சூழல் மாசுபோடு, பாதுகாப்பான குறைந்த செலவு பயணம் என பல்வேறு நன்மைகள் உண்டு என இதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விமானத்தின் நீளம் 19 அடி. விமானத்தை இயக்குவதற்கு தேவையான மின்சக்தியை வழங்குவதற்கு 120 பேட்டரிகள் இதில் உண்டு. லித்தியம் தாது மற்றும் இரும்பு அடங்கிய பேட்டரிகள் இவை.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் பறப்பதற்கு தேவையான மின்சக்தியை இந்த பேட்டரிகள் கொண்டுள்ளது.

airbus-launched-battery-aero-planeசாதாரண பெட்டோரில் இயங்கும் விமானத்தில் ஒரு மணி நேரம் இயங்குவதற்கு ஆகும் செலவு 3500 ரூபாய் செலவாகும். ஆனால் இப்புதிய பேட்டரி விமானத்தில் ஒரு மணி நேர விமான இயக்கத்திற்குத் தேவையான செலவு ரூபாய் 1000 மட்டுமே.

மூன்றில் ஒரு மடங்கு செலவு மட்டுமே ஆகிறது. இந்த வகை விமானங்கள் ஃபன் 2.0 மற்றும் ஃபன் 4.0 என்ற இரு வகையான விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் தயாரிக்கதிட்டமிள்ளது.

இந்த வகை விமானங்கள் வெளியிடப்பட்டதும், விமானங்களின் போக்கு வரத்து கட்டணம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

0 comments

Post a Comment