Saturday 3 May 2014

அமெரிக்க Havard Busines School நடத்திய போட்டியில் 4 இந்தியர்கள் பரிசு வென்றனர்

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் உலகப் புகழ்பெற்றதாகும். அங்கு இந்தியா உட்பட பல வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

அந்த பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் புதிய தொழில் முனைவோர்களுக்கான 'நியு வென்ச்சர்' போட்டி நடத்தப்பட்டது.

மூன்று ரவுண்டுகளாக நடந்த இப்போட்டி புதுமையான தொழில்கள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய கருத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
Harvard-business-school-competition-4-Indian-win-prezes



அதில் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களும், ஏற்கனவே படித்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போட்டியில் புதுமையான முறையில் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையிலான தொழில்களை செய்து வந்த 4 இந்தியர்களுக்கு பரிசு கிடைத்துள்ளது.

அதில் இந்தியாவைச் சேர்ந்த அம்ரிதா சைகல், பிரிதார் குமார், மீரா மேத்தா, மற்றும் நிக் லாரன்ஸ் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

இவர்களில் அம்ரிதா சைகல் 'ஸாதி' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் வீணாக போகும் வாழை நாரில் இருந்து கிராமப்புற பெண்களுக்கான ஸானிட்டரி பேடுகளை தயாரித்து குறைவான விலையில் விற்று வருகிறது.

இந்தியாவில் இரண்டு கிராமங்களில் மட்டுமே இயங்கி வரும் 'ஸாதி' விரைவில் தனது தொழிலை 50 பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி 5 கிராமங்களில் விரிவாக்கம் செய்ய உள்ளது.

பிரிதார் குமார் என்பவர் 'பூயா பிட்னஸ்' என்ற உடற்பயிற்சிக் கூடத்தை நடத்தி வருகிறார். இதில் ஜிம் உலகத்திலேயே புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வழியாக திறமையான அனுபவமுள்ள பயிற்சியாளர்கள் மூலம் குறைவான கட்டணத்தில் பயிற்சி அளித்து வருகிறார்.

மீரா மேத்தா, நிக் லாரன்ஸ் ஆகிய இருவரும் 'டோமேட்டோ ஜாஸ்' என்ற நிறுவனத்தை நடத்துகிறார்கள்.

இவர்கள் சிறிய விவசாயிகளுக்கு உதவும் வகையில் நைஜீரியாவில் விளையும் தக்காளிகளை பேஸ்ட்டாக மாற்றி பதப்படுத்திக் கொடுக்கிறார்கள்.

ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் எம்.பி.ஏ. மாணவர்களான (2014) இவர்கள் நால்வருக்கும் வழங்கப்பட்டுள்ள பரிசின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.80 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment