Tuesday 15 April 2014

சிம்பு படங்கள் டிராப். ஹன்சிகா அதிரடியால் கோலிவுட் பரபரப்பு.

சிம்புவின் வாலு படத்தில் தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்றும் அந்த படத்திற்காக தான் கொடுத்த கால்ஷீட்டை படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் பலமுறை வீணாக்கிவிட்டதாகவும், இனியொரு முறை தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதனால் சிம்புவின் வாலு படம் டிராப் ஆகும் நிலையில் இருக்கின்றது.

சிம்புவின் வாலு படத்திற்கு நடிக்க ஹன்சிகா கால்ஷீட் கொடுக்க மறுப்பதாக வந்த புகாரை தயாரிபாப்பாளர்கள் சங்கம் விசாரணை செய்தது. இதற்கு ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார்.
simbu-padangal-drop-hansiga-athiradi


வாலு படத்திற்காக தான் இதுவரை கொடுத்த ஒன்பது கால்ஷீட்டுக்களை இயக்குனர் வீணடித்துவிட்டார் என்றும் அவை எந்தெந்த தேதிகள் என்ற விபரங்களையும் அவர் கொடுத்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்புகூட தான் வாலு படத்திற்காக கொடுத்த கால்ஷீட்டை வாலு படக்குழுவினர் விணடித்துவிட்டனர் என்றும், இனி தான் 2015 டிசம்பர் வரை அனைத்து தேதிகளுக்கும் கால்ஷீட் முறையாக வேறு படங்களுக்கு கொடுத்துவிட்டதாகவும்,  அதனால் இனியும் தன்னால் வாலு படத்திற்கு தேதிகள் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறிவிட்டார்.

இதேபோன்று வேட்டை மன்னன் படத்திற்காக தான் கொடுத்த தேதிகளையும் சம்மந்தப்பட்ட இயக்குனர் வீணடித்துவிட்டதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஹன்சிகா கைவிரித்துவிட்டார். எனவே இந்த இரு படங்களும் டிராப் ஆகிறது.

ஹன்சிகாவின் நியாயமான விளக்கத்தை தயாரிப்பாளர் சங்கமும் ஏற்றுக்கொண்டது. எனவே ஹன்சிகா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், இது முழுக்க முழுக்க வாலு இயக்குனரின் தவறுதான் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறிவிட்டது.

0 comments

Post a Comment