Tuesday 15 April 2014

ஆடை அலங்காரம்.. அவிழ்த்து போட்ட சிங்காரம்..! (சிரிப்பு கதை)

அந்த திருமண மண்பத்தில் ஏக தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.

பெண்ணுக்கு மாப்பிள்ளையும், மாப்பிள்ளைக்கு பொண்ணும் ஏகப் பொருத்தமாக இருந்தார்கள்.

இருவீட்டாரும் பேசி திருமணத்தை அவர்கள் விருப்படியே ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நடத்திக்கொண்டிருந்தார்கள்.



முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.

பெண்ணுக்கு ஆடை அலங்காரங்கள் கண்ணை சொக்கும் விதத்தில் மிக அழகாக இருந்தது.

மாப்பிள்ளைக்கும்... அதுபோலதான்... பெண்ணைவிட ஒரு மடங்கு அழகில் அசத்திக்கொண்டிருந்தார்.


முகூர்த்த நேரம் நெருங்க... நெருங்க.. மணவறையில் பெண் அழகாக அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள்...

கூட்டம் நெருக்கியடித்தது.

உற்றார் உறவினர்கள், சுற்றம் எல்லாம் புடைசூழ மணக்காட்சியைக் காண திரண்டிருந்தனர்.


மாப்பிள்ளை அழைக்கப்பட்டார்.

மாப்பிள்ளைத்தோழனுடன்,  ஜம்மென்று மணமகன் மணவறையை நோக்கி நடந்தான்.

"சிங்காரத்தோட அழகுக்கு பொண்ணோட அழகு கொஞ்சம் குறைச்சல்தான்.." என்று மணமகன் வீட்டார் பேசிக்கொண்டார்கள்.

சிங்காரத்திற்கு  கொள்ளை மகிழ்ச்சி...

கூட்டத்தின் மூச்சுக் காற்றால் மாப்பிள்ளை முகத்தில் இலேசாக வியர்வைத் துளி ஒன்று எட்டிப் பார்த்தது.

அதைத் துடைக்க மாப்பிள்ளைத் தோழன் முயற்சித்தான். ..

"இருப்பா.. ஓங்கர்ச்சீப்ல ஏன் தொடைக்கிற...மாப்பிள்ளை கர்ச்சீப்லேயே தொடச்சி விடுங்கப்பா..." என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல,

அப்போதுதான் மாப்பிள்ளை த்தோழனுக்கு நினைவு வந்தது.

மாப்பிளை அறையிலேயே கர்சீப்பை மறந்து வைத்துவிட்டது நினைவுக்கு வந்தது..

"என் கர்சீப்பை எடுக்காம ஏண்டா வந்தே.." சிங்காரம் மாப்பிள்ளைத் தோழனை முறைத்தான்..

மாப்பிள்ளையின் குண்டு கண்கள் சிவந்துவிட்டது....

இதோ உடனே போய் எடுத்துட்டு வந்துடறேன்... நீ மட்டும் கோப பட்டுடாத.. " என்று ஓடினான் மாப்பிள்ளைத் தோழன்...

மாப்பிள்ளைக்கு கோபம் வர ஆரம்பித்ததும் அவனுடைய அம்மா டென்சன் ஆனாள்...

"தம்பி... கொஞ்சம் பொறு.. உன் பிரண்ட் உன்னோட கர்சீப்பை எடுத்துட்டு வந்துடுவான்.கூட்டத்துல மானத்த வாங்கிடதா.. கொஞ்சம் பொறுத்துக்கோ..." பல்லைக் கடித்துக்கொண்டே பதறினாள் மாப்பிள்ளையின் அம்மா.

போன மாப்பிள்ளைத் தோழன்...உடனே திரும்பினான்...

"மாப்பிள்ளை கர்சீப் இல்லடா.. யாரோ பசங்க விளையாட்டுத்தனமா எடுத்ததுட்டாங்க போல..."

சொன்னதும்தான் தாமதம்.. மாப்பிள்ளை எகிறி .. எகிறி குதிக்க ஆரம்பித்துவிட்டான்....

"எனக்கு கர்சீப் வேணும்....எனக்கு கர்சீப் வேணும்....எனக்கு கர்சீப் வேணும்...."

மாலைகள் உதிர்ந்து விழுந்து விட்டது.. ஆடைகளை அவிழ்த்து எறிந்தான்...

ஜட்டியுடன் எகிறி எகிறி குதித்து அடம்பிடிக்க ஆரம்பித்தான் சிங்காரம்....


மேக்கப் எல்லாம் கலைந்து.. கீழே படுத்து உருள ஆரம்பித்தான்...

"எனக்கு கர்சீப் வேணும்....எனக்கு கர்சீப் வேணும்....எனக்கு கர்சீப் வேணும்....

மாப்பிள்ளைத் தோழன்.. வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டான்....
அவனுடைய அம்மாவோ தர்ம சங்கடத்தில் நின்றாள்...

இனி அவனை யாரும் தடுத்த நிறுத்த முடியாது.. அவனாகவே அடங்கினால்தான் உண்டு.

சின்ன வயசிலிருந்தே கோபம் வந்துவிட்டால் இப்படிதான்.. இருப்பதை எல்லாம் அவிழ்த்துவிட்டு அம்மனாக உருண்டு பிரளவுவான்....29 வயதிலும் இப்படி நாலு பேருக்கு முன்னால் செய்வான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை..

மணப்பெண் என்ன ஆனாள்?

மாப்பிள்ளை பையன் ரெண்டாவது முறை கோபபட்டபோது மாப்பிள்ளை வேட்டி அவிழ்ந்து விட்டது.

அப்போதுதான் மணப்பெண் கவனித்தாள்.. உள்ளே அவன் குழந்தைகள் போடும்  baby pampers அணிந்திருந்தான்.

அதைப் பார்த்ததும் மணப் பெண் மயக்கம் போடாத குறையாக எழுந்து திரும்பி பார்க்காமல் ஓடியேவிட்டாள் அவளது வீட்டிற்கு....

கூட்டம் "கொல்"ளென சிரித்தது.. மண்டமே எதிரொலித்தது. 

0 comments

Post a Comment