Wednesday 16 April 2014

போங்கடி நீங்களும் உங்க காதலும்

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உருவாகியுள்ளது "போங்கடி நீங்களும் உங்க காதலும்" திரைப்படம்.

கே.ஆர்.கே மூவீசின் தயாரித்திருக்கும் இப்படத்தில் எம்.ஏ.ராமகிருஷ்ணன் நடித்ததுள்ளார். டைரக்டரும் இவரே.

கதாநாயகிகளாக ஆத்மியா மற்றும் காருண்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மற்றும் ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி,சாமிநாதன்,சென்ராயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு செய்துள்ளார் எம்.வி.பன்னீர்செல்வம்.

கண்ணன் இசையமைத்துள்ளார்.


அண்ணாமலை பாடல்கள் எழுத, வசந்த் அய்யப்பன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மோகன் கலை அமைக்க, பாஸ்கர் நடனம் அமைத்துள்ளார்.

போங்கடி நீங்களும் உங்க காதலும் படம் பற்றி கூறிய இயக்குநர் ராமகிருஷ்ணன்,

"பெண்களின் பலம், பலவீனம் ஆண்கள் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை பெரும்பாலான ஆண்கள் காப்பாற்றுவதில்லை.

 காதலிக்கும் போது இருக்கும் அக்கறையும், அன்பும் கல்யாணத்திற்கு பிறகு முற்றிலும் குறைந்து விடுகிறது.

இதற்கு முக்கிய காரணம் ஆண்களின் அலட்சியமே! இதை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் சில ஆண்கள் தற்போதைய தொழில் நுட்பங்களை ( Social Network )தவறாக பயன்படுத்திக்கொண்டு பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பல இடையூறுகள் தந்து சமூக அவலங்களுக்கு ஆளாக்குவதோடு, அவர்களின் வாழ்கையையும் சீரழிக்கிறார்கள்.

அப்படி ஒரு தவறான நட்பினாலும், காதலாலும் ஏற்படும் பாதிப்புகளை பெண்களுக்கு உணர்த்தவும், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும்,அவர்களின் மீது அக்கறை கொண்டு உருவாக்கப் பட்டதே இந்த 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' திரைப்படம்." என்று தெரிவித்தார்.

இப்படம் இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. போங்கடி நீங்களும் உங்க காதலும் படம் கருத்துள்ள படம் என்று டைரக்டர் கூறினார்.

0 comments

Post a Comment