Sunday 13 April 2014

ஹன்சிகா உடம்பை குறைத்த ரகசியம்

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா  நடித்து வெளிவந்துள்ள படம் மான் - கராத்தே...

வித்தியாசமா கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் நூறு நாளை கடந்து ஓடும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாக்சராக நடித்துள்ளார். 

man-karethe-oru-vetri-padam
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை கண்டு பொறாமைப்பட்டவர்கள், மான் கராத்தே குறித்த பொய்யான விமர்சனங்களை எழுதிவருகின்றனர்.

ஹன்சிகா அர்ப்பணிப்பு: 

மான் கராத்தே படத்திற்காக சிவகார்த்தியேனின் உடல் வாகுக்கு ஏற்ற மாதிரி, தன்னுடைய உடல் எடையை ஏழு கிலோ வரை ஒரே வாரத்தில் குறைத்து, அர்ப்பணிப்புடன் நடித்தார் ஹன்சிகா.

"அவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார். ஜோடியாக நடிக்கும்போது அது வித்தியாசமாக தெரியும். அதற்காக நான் என்னுடைய உடல் எடையை குறைத்து நடித்தேன்" என்று ஹன்சிகா கூறியதும் குறிப்பிடத்தக்கது. 

மான்கராத்தே - வெற்றிப்படம்

மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி போய்கொண்டிருக்கும் மான்-கராத்தே படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் மிகச்சிறப்பாக உள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரவித்தனர். 

தற்பொழுது இணையத்திலும், ஊடகங்களிலும், மான்-கராத்தே படம் வசூல் பின் தங்கியுள்ளதாகவும், திரைப்படத்திற்கு கூட்டம் குறைவாக வருகிறார்கள் எனவும் புரளி கிளப்பி வருகின்றனர். 

அவர்களின் நோக்கம் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தடுத்த நிறுத்தும் முன்னணி நடிகர்களை திருப்தி படுத்துவதாகவே உள்ளது என சிவகார்த்தியேனின் நட்பு வட்டத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளது. 

இதற்கிடையில் மான்-கராத்தே படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டங்களும் அரங்கேறியுள்ளன. 

உண்மையிலேயே மான் கராத்தே ஒரு வெற்றிப்படம்தான் என்பதில் சந்தேகமில்லை. 

அதனுடைய ஆரம்ப வசூலே அதற்கு சாட்சி என மேலும் அவர்கள் தெரிவித்தனர். 

சூப்பர் ஸ்டார் கார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் என்றுமே சூப்பர் ஸ்டார்தான்... 

இனி அவருடைய வளர்ச்சியை யாரும் தடுக்கவே முடியாது எனவும் அவருடைய தீவிர ரசிகர்கள் கோரசாக கூறி, அவரை உற்சாகப்படுத்தினர். 

அடுத்த மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன்தான்...அதில் சந்தேகமேயில்லை..!


0 comments

Post a Comment