Monday 21 April 2014

மலேசிய விமானத்தின் தேடுதல் வேட்டை நீர்மூழ்கி 3-ல் 2 பங்கு முடிந்து உள்ளது தேடுதல் ஒருங்கிணைப்பு குழு

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.

இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சியில் இன்று  8 நாடுளின் 11 கப்பல்கள், 10 விமானங்கள்,  ஈடுபட்டு வருகின்றன. விமானத்தின் கருப்பு பெட்டியை  தேடுவதற்காக ரோபோ நீர்மூழ்கி புளூபின் 21 பயன்படுத்தப்பட்டு  வருகிறது.

malaysia-vimanam-mh370-thedal-mudivu



ப்ளூபின் 21 என்ற நீர்மூழ்கிக்கருவி  கடலுக்கடியில் சுமார் 4,500 மீட்டர் ( 15,000 அடி) வரை மூழ்கி செல்லக்கூடிய திறன் கொண்ட்து. இதுவரை

விமானத்தை தேடும் கூட்டு நிறுவன ஒருங்கிணைப்பு மையம் இதுவரை 3 ல் 2 பங்கு பகுதிகள் தேடி முடிக்கபட்டு உள்ளது ஆனால் எதுவுக் கிடைக்கவில்லை என கூறி உள்ளது.

ப்ளூபின் 21 நீர்மூழ்கி கடலுக்கு அடியில்9 முறை சென்று தேடி உள்ளது. தனது 9-வது தேடலை  இன்று முடித்தது.

ப்ளூபின் 21 இன்றைய தேதிவரை கடலுக்கு அடியில் சுமார் 3இல் 2 பங்கு பகுதிகளில் தனது தேடுதல் வேட்டையை முடித்து உள்ளது.

ஆனால் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.இவ்வாறு கூறி உள்ளது.

ஆக, மலேசிய விமானத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்க, கடலில் இன்னும் மீதமுள்ள ஒரு பகுதியில் தேடுதலை முடித்தால் போதும். விமானத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அல்லது விமானம் பற்றிய தகவல்கள் விமானத்தைப் போலவே மாயமானதாகிவிடும்.

முடிவு மோசமானதாக இருந்தால், பயணிகளும், பயணிகளின் உறவினர்களின் நிலைமை பரிதாபம்தான். 

0 comments

Post a Comment