Monday 21 April 2014

"தென்கொரிய கப்பல் விபத்தில் அதிக உயிர்பலி நடக்க மாலுமிகளே காரணம்" தென் கொரிய அதிபர்

தென்கொரியாவின் இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜூ சுற்றுலா தலத்துக்கு கடந்த புதன்கிழமை 477 பயணிகளுடன் சென்ற சிவோல் என்னும் சுற்றுலா கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்தது.

இதில் 64 பேர் பலியானார்கள். 175 பயணிகள் மீட்கப்பட்டனர். இன்னும் 238 பேர் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
kappal-vibathil-marangal-erpada-maulmigale-karanam
கப்பல் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் கப்பலின் கேப்டன் லீ ஜோன்சீவோக் உள்ளிட்ட சில மாலுமிகள் கப்பலில் இருந்து குதித்து உயிர் தப்பினர். பின்னர் அவர்களை தென்கொரிய அரசு கைது செய்தது.

ஜிந்தோ நகரில் கப்பல் கவிழ்ந்து தொடர்பாக தென்கொரிய அதிபர் பார்க் குயன்-ஹை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கப்பல் மாலுமிகளின் செயலை அவர் வன்மையாக கண்டித்து பேசினார். கப்பலின் கேப்டனும், சில மாலுமிகளும் கப்பல் கவிழ்ந்து நீரில் மூழ்குவது தெரிந்த பின்னரும் உயிர் காக்கும் படகுகள் மூலம் பயணிகளை தப்பிக்க வைக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

40 நிமிடங்கள் கழித்தே அவர்கள் தப்புவதற்கு அனுமதியளித்துள்ளனர். கப்பல் மாலுமிகளின் இந்த செயல் கொலைச் செயலுக்கு சமம் ஆகும்.

இந்த பேரழிவுக்கு காரணமானவர்கள் அத்தனை பேர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

0 comments

Post a Comment