Thursday 10 April 2014

கருப்பு பெட்டியை நெருங்கியது பன்னாட்டுக் கப்பல்கள்

மாயமான மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் விமானத்தை தேடும் பணி இரவும் பகலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

இதற்கிடையே விமானத்தில் கருப்பு பெட்டியின் சிக்னலை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீன கப்பலும், ஆஸ்திரேலியாவின் கப்பலும் கண்டுணர்ந்ததாக தகவல்கள் வெளியாயின.

இதன் அடிப்படையில் கருப்பு பெட்டி கிடப்பதாக கருதப்பட்டுள்ள இடத்தை நோக்கி கப்பல்கள் விரைந்தன.
karuppu-pettiyai-nerungiyathu-kappalgal

சீதோஷ்ண நிலை காரணமாக அங்கு செல்வதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பன்னாட்டுக் கப்பல்கள் கருப்பு பெட்டி சிக்னல் கிடைத்ததாக கருத்தப்பட்டும் இடத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள பன்னாட்டுக் கப்பல்களில் உள்ள நிபுணர்கள், "விரைவில் மலேசியா விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடித்துவிடுவோம்" என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்காவின் அதி நவீன  'ஓஷன் ஷீல்டு' என்ற கப்பல் மூலம், பிளாக் பாக்ஸ் டிடெக்டர் என்ற சாதனம், கடலுக்கு அடியில் செலுத்தப்பட்டு, தேடப்பட்டு வருகிறது.

இதன்மூலம், மாயமான விமானம் இருக்கும் இடம், விரைவில் தெரிய வரும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

கருப்பு பெட்டியை கண்டுபிடித்த பிறகே விமானத்தின் விபத்து பற்றிய விபரங்களை அறிய முடியும்.

கருப்பு பெட்டி கிடைக்காவிடில், மாயமான விமானத்தைப் பற்றிய தகவல்களும் மாயமாகிவிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments

Post a Comment