Tuesday 8 April 2014

கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் 'அந்த' விஷயங்கள்

இன்றைய அவசர யுகத்தில் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. காரணம் புரிந்துணர்வு இல்லாமல் போவதுதான்.

மற்றுமொரு முக்கியமான காரணம், இருவரும் வேலைக்குச் செல்வதால், சரியான நேரத்தில் சரியானதை செய்ய முடியாமல் போவதால் ஏற்படும் நேர மோதல்கள், மற்றும் கருத்து வேறுபாடுகள், அலுவலக வேலை சுமை என பல காரணங்கள் உள்ளன.

kanavan-maniviyidam-ehir-parkkum-anth-visayangal


ஒவ்வொரு குடும்பத்திலும் இது இயல்பாக நடக்க கூடியதுதான். என்றாலும் இக்காலகட்டத்தில் கணவன் மனைவி பிரச்சினை மேலும் மேலும் அதிகரித்து, இறுதியில் குடும்ப பிளவு கூட ஏற்படுகின்றது.

இதற்கு காரணம் கணவன்-மனைவி புரிந்துணர்வு இன்மையாகும் . சாதாரணமாக ஒரு கணவன் தன் மனைவியிடம் பின்வருவனவற்றை எதிர்பார்த்து காத்திருப்பான்.
  • அடக்கம், பணிவு தேவை. 
  • அதிகாரம் பண்ணக் கூடாது.
  • அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
  • இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
  • உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
  • எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
  • எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
  • எப்போதும் சிரித்த முகம்.
  • கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
  • கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
  • கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
  • கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
  • கணவனை சந்தேகப்படக் கூடாது.
  • காலையில் முன் எழுந்திருத்தல்.
  • குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
  • குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
  • குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
  • குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
  • கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
  • சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
  • தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
  • தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
  • தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
  • தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
  • நேரம் பாராது உபசரித்தல்.
  • பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
  • பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.
  • பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
  • வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
மேற்சொன்னவை அனைத்தையும் குடும்ப பெண்கள் பின்பற்றும் பட்சத்தில்,  குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். பெரும்பாலான பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும்.

குறிப்பாக மாமியார் மருமகள் சண்டை வரவே வராது. இதனால் கணவர்களும், மனைவியை நேசிப்பது அதிகரிக்கும். மனைவியின் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் நிறைவேறும். குடும்ப நபர்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் இருக்கலாம். 

0 comments

Post a Comment