Monday 28 April 2014

நடுவானில் படு பயங்கரமாக மோதிக்கொண்ட விமானங்கள்..!

 இது விமான விபத்துக்களின் காலம் போல இருக்கிறது. ஆம் நண்பர்களே... மலேசியா விமானம் mh370 மாயமானதிலிருந்து, விமான விபத்துக்களும் அதிகரித்து வருவதுபோல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.

மலேசிய விமானம் மாயம்
இந்திய விமான விபத்து
அதன்  பிறகு ஆஸ்திரேலிய விமானம் கடத்தல்
என ஏதாவது ஒரு வகையில் விமானம் பற்றிய தகவல்கள், விமான விபத்துகள் என ஏற்பட்டுக்கொண்டுள்ளது.
flights-crashed-in-San-Francisco
நேற்று சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவை ஒட்டிய விமான நிலையத்தில் வானில் பறந்துகொண்டிருந்த இரண்டு சிறிய விமானங்கள், தரையிறங்க வந்தபோது மோதிக்கொண்டன.


மோதிக்கொண்ட விமானங்களில் ஒன்று கடலில் விழுந்துவிட்டது. மற்றொரு விமானத்தை ஓட்டி வந்த விமானி, சாதுர்யமாக அதை விமானத்தின் ஓடுபாதையில் தரையிறக்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இரு விமானங்களிலும், விமானிகள் மட்டுமே பயணித்ததால் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

கடலில் விழுந்த விமானத்தையும், அதிலிருந்த விமானியையும் தற்பொழுது தேடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

0 comments

Post a Comment