Thursday 17 April 2014

குஜராத்தைவிட தமிழகமே முதன்மை மாநிலம்; முதல்வர் ஜெயலலிதா

குஜராத் மாநிலத்தைவிட தமிழகமே அனைத்து துறைகளிலும் முதன்மை வகிக்கிறது என்று முதல் ஜெயல்லிதா கூறினார்.

தரும்புரியில் மக்களவைத் தொகுதித் தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயல்லிதா பேசியதாவது:

சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திமுக, அதிமுக மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை எனப் பேசியுள்ளார்.

மக்கள் நலனில் குஜராத் மாநிலத்தை விட தமிழகம் முன்னணியில் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் 16.6 சதம் பேர் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.
Gujarathaivida-tamilagame-muthanmai-manilam

தமிழகத்தில் 11.3 சதம் பேர் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். குழந்தை இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.


குஜராத் மாநிலம் 11-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1000 குழந்தைகளில் ஒரு வயதை அடைவதற்குள் 21 குழந்தைகள் மட்டுமே இறக்கின்றன.

ஆனால், குஜராத்தில் 38 குழந்தைகள் இறக்கின்றன. தமிழகத்தில் தாய் இறப்பு விகிதம் 90 என்ற அளவில் உள்ளது. குஜராத்தில் இது 122ஆக உள்ளது.

தமிழகத்தில் உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களில் 14.3 சதம் பேர் பட்டதாரிகள். குஜராத்தில் 10 சதம் பேர் மட்டுமே பட்டதாரிகளாக உள்ளனர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. இதற்கு முற்றிலும் நேர்மாறாக குஜராத் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 3}ஆம் இடத்தில் இருக்கிறது.

ஆனால், குஜராத் 5-ஆவது இடத்தில் உள்ளது. அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் நாட்டிலேயே தமிழகம் 3}ஆம் இடத்தில் உள்ளது.

2012-13-ஆம் ஆண்டில் ரூ.15,252 கோடி அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில் குஜராத்தில் ரூ.2,676 கோடி ரூபாய் மட்டுமே அன்னிய முதலீடாகப் பெறப்பட்டுள்ளது.

மென்பொருள் ஏற்றுமதியில் 4-ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது. குஜராத் 11-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த தொழில்சாலைகளின் எண்ணிக்கை 36,996.

குஜராத்தில் 22,220 தொழில்சாலைகள்தான் உள்ளன. 20011-12-இல் புதிதாக தொடங்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்களின் எண்ணிக்கை 1,61,732.

ஆனால், குஜராத்தில் 1,20,016 தொழில்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன.

உணவு உற்பத்தி: உணவு உற்பத்தியில் 2011-12ஆம் நிதியாண்டில் 101.57 லட்சம் டன் என்ற அளவை எட்டி தமிழகம் படைத்த சாதனையைப் பாராட்டி மத்திய அரசு விருது அளித்துள்ளது.

ஆனால், குஜராத் மாநிலம் உணவு தானிய உற்பத்தியில் 88.74 லட்சம் டன் என்ற அளவில்தான் உள்ளது.

ஆனால், உண்மைக்கு மாறாக குஜராத் அனைத்திலும் முதன்மையாக இருப்பது போல ஒரு மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலம் வெற்று விளம்பரத்தில் கவனம் செலுத்துகிறது. தமிழக அரசு மக்கள் தொண்டு செய்வதில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகிறது.


கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: இதேபோல, தேசி அளவில் நதிகள் இணைக்கப்படாத சூழலில் கடையநல்லூர், சேலம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்பட 19 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நிகழாண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன.

எனவே, நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த தேர்தலில் ஊழலில் ஊறிய காங்கிரஸ், அதற்குத் துணை போன திமுகவுக்கு தக்க பாடம் புகட்டி அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா

0 comments

Post a Comment