Wednesday, 26 March 2014

சூப்பர் ஸ்டாருக்கு Wonder book of Records வாழ்நாள் சாதனையாளர் விருது

Wonder book of Records என்ற அமைப்பு லண்டனை தலைமையிடமாக்கொண்டு இயங்குகிறது. இந்த அமைப்பின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின்  தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பிங்கி நரேந்திர கவுட், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சரவண்குமார் மற்றும் சென்னை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் அரங்கில்இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
super-starukku-Wonder-book-of-Records-viruthu
அதில், சாதாரண குடும்பத்தில் பிறந்து பல்வேறு நிலைகளில் பாடுபட்டு சினிமா துறையில் சாதனை படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு எங்கள் அமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளோம்.



இது தமிழகத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்து வழங்கும் முதலாவது வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகும். இதற்கான சான்றிதழை நேற்று முன்தினம் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று வழங்கினோம்.

அங்கு ரஜினிகாந்த் இல்லாததால் அவருடைய மனைவி லதாவிடம் சான்றிதழை ஒப்படைத்தோம்.

நடிகர் அமிதாப்பச்சனுக்கு எங்கள் அமைப்பு சார்பில் ஏற்கனவே விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து சாதனையாளர் விருது வழங்க முடிவெடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



உண்மையிலேயே ரஜினிகாந்திற்கு Wonder book of Records அமைப்பு வழங்கிய விருது பொருத்தமானதுதான் என்று ரஜினி ரசிகர்கள் மகிழ்ந்து போயுள்ளனர்.


0 comments

Post a Comment