Thursday, 27 March 2014

300 ஆண்டுகளுக்குரிய தேதி, கிழமையை சொல்லும் அபூர்வ சிறுவன்..!

முந்நூறு ஆண்டுகளுக்குள் ஏதாவது ஒரு தேதியை குறிப்பிட்டால் எந்த கிழமை என்று சரியாக சொல்லி சென்னையை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுவன் அசத்தி வருகிறான்.

அபூர்வ நினைவாற்றல்: காலையில் என்ன சாப்பிட்டோம் என்பதை கூட நம்மில் சிலர் மாலைக்குள் மறந்துவிடுவோம். ஆனால் சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் தன்னுடைய பிரமிக்கத்தக்க நினைவாற்றலால் கி.பி. 1900ம் ஆண்டு முதல் 2,200ம் ஆண்டு வரையிலான 300 ஆண்டு கால அட்டவணையை மனதில் பதிய வைத்துள்ளான்.
300-aandukalukku-thethi-kilamai-sollum-athisaya-siruvan

தேதி, மாதம், வருடத்தை குறிப்பிட்டு எந்த கிழமை என்று கேட்டால் நொடிப்பொழுதில் கிழமையை குறிப்பிட்டு அசத்துகிறான். இந்த அசாத்திய சிறுவன் வேளச்சேரியை சேர்ந்த வேலுசாமி என்பவரின் மகன் ஶ்ரீராம் பாலாஜி.

கிண்டியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறான். பள்ளி ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் , என யார் தேதியைக் குறிப்பிட்டு கேட்டாலும் பிறந்த நாள், விழாக்கள் நடைபெற்ற கிளழமைகளை துல்லியமாக கூறி அசத்தி வருகிறான்.

கடந்த 2011ம்ம ஆண்டு மே மாதத்தின் போது பாட்டி இறந்த தினம் தெரியாமல் தாய், தந்தை, சகோதரி யோசித்துக்கொண்டிருந்தனர். அப்போது சட்டென்று ஶ்ரீராம் பாலாஜி கிழமை மற்றும் தேதியை குறிப்பிட்டான்.

அதை நம்பாமல் பெற்றோர் தேதியை சோதித்து பார்த்தபோது தேதி சரியாக இருந்த்தை பார்த்து அதிசயத்தினர். இதனை யடுத்து சகோதரி விஷ்ணபிரியா, தாய் ஜீவபிரியா மற்றும் தந்தை வேலுசாமி ஆகியோர் குடும்பத்தில் நடந் முக்கிய நிகழ்வுகளை தேதி குறிப்பிட்டு சொல்லும்படி கூறினர். அத்தனை நாட்களையும், கிழமையுடன் சொல்லி பிரமிக்க வைத்தான்.

நினைவாற்றல் வந்த்து எப்படி?

நினைவாற்றல் குறித்து ஶ்ரீராம் பாலாஜி நிருபவர்களிடம் கூறும்போது, "இந்த நினைவாற்றல் எனக்கு வருவதற்கு காரணம் செல்போன்தான்.

நான் தினந்தோறும் சராசரியா 3 மணி நேரம் செல்போனில் உள்ள ஆண்டு கால அட்டவணையை காலண்டர் பார்த்துக்கொண்டிருப்பேன்.

அதனை ஞாபகம் வைத்து சொல்கிறேன். ஆண்டு கால அட்டவணையை மட்டுமே நான் ஞாபகம் வைத்துள்ளேன். பாடல்களில் கணிதம், ஆங்கிலம் மற்றும் வரலாறு உள்ளிட்ட பாடங்கள் மற்றும் தமிழ் மாதங்களை என்னால் ஞாபகபடுத்தி சொல்ல முடியாது. நினைவாற்றலை மேலும் அதிகரிக்க முயற்சி செய்துவருகிறேன்." என்றான்.

அப்போது அவனது பெற்றோர் வேலுசாமி, ஜீவபிரியா மற்றும் சகோதரி விஷ்ணுபிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.

செல்போனால் சீரழியும் சிறார்களும் உண்டும். அதே செல்போனால் இத்தகைய விந்தையான நினைவாற்றலை வளர்த்துக்கொண்ட இச்சிறுவனை பாராட்டியே ஆகவேண்டும்.
சிறுவனின் நினைவாற்றல் பல்துறைகளிலும் மேம்பட்டு வளர வாழ்த்துவோம்.

0 comments

Post a Comment