Sunday, 30 March 2014

நெடுஞ்சாலை சினிமா விமர்சனம்

நீங்க சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன். ஆமாங்க. அதே படத்தோட டைரக்டர்தான் கிருஷ்ணா... அவருடைய அடுத்த படம்தான் நெடுஞ்சாலை.

இப்போ நெடுஞ்சாலை படத்தைப் பத்தின கணிபுகள்ல இறங்கியிருப்பீங்களே..!
இருங்க... நான் என்னோட விமர்சனத்தை முடிச்சதும் நீங்க கணிச்சுக்கோங்க..

தேசிய நெடுஞ்சாலைகள்ல போகிற லாரியை மறித்து களவாணித் தனம் பண்ணும் கேரக்டர் தான் கதாநாயகன். பேரு ஆரி.
nedunjsalai-cinema-vimarchanam

நெடுஞ்சாலை ஓரமாக ஓட்டல் கடை வைத்து நடத்துபவர் நாயகி ஷிவதா. அதில் இருக்கும் தோசை மாஸ்டர் தம்பி ராமையா.. ரோட்டோரக் கடையே தவிர, அதில் அதிக வருமானம் எதுவுமே இல்லை. 

பழைய நெடுஞ்சாலையிலேயே லாரிகள் எல்லாம் போவதால்தான் இவர்களுக்கு இந்த நிலைமை.. இதைக் கண்டுகொண்ட நாயகன், லாரிகள் எல்லாமே புதிய நெடுஞ்சாலையில் போற மாதிரி ஒரு ட்ரிக் செய்றார்.. அப்புறமென்ன?

நாயகி கடையில் கல்லா கட்டத்தொடங்குது... சின்ன சின்ன மோதலுக்கு அப்புறம் நாயகனுக்கும், நாயகிக்கும் காதல் பத்திக்குது..

ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் நிறைவேறுமா? வில்லன் வர்றார்.. யாரு அதுன்னா நம்ம கதாநாயகனோட முதலாளி. அவர் ஒரு மலையாளி. அவருக்கு அந்த ஏரியா இன்ஸ்பெக்டரும் சப்போர்ட் பன்றாரு...
ஆனால் முதலாளியோட ஆசை நிறைவேறத்தால, நாயகியை விபசாரின்னு சொல்லி, அந்த இன்ஸ்பெக்டரோ சப்போர்ட்ல கைது பண்ணிடறாங்க... நம்ம நாயகன் நாயகிய அந்த பழியிலிருந்து விலக்கி காப்பாத்திடறாரு..

இதனால் முதலாளிக்கும் நாயகனுக்கும் ஒரே பகையாயிடுதுங்க....

எப்படியும் நாயகி ஷிவதாவை அடைய வேணும்னு முதலாளியும், எப்படியாவது ஆரியை (கதா நாயகன்) கைது செய்துடனும்னு இன்ஸ்பெக்டரும் திட்டம் போடறாங்க....

அப்புறம் என்ன சின்ன சின்ன ட்விஸ்ட் வச்சு, யாரு ஜெயிச்சாங்கன்னு க்ளைமாக்ஸ் சொல்லுது..

இதையும் சொல்லிட்டா நீங்க படம் பார்க்கவே போகமாட்டீங்க...அதுதான்... 

கதாபாத்திரத்திற்கு தகுந்த பாடி கதாநாயகனுக்கு... நாயகியையும் குறை சொல்ல முடியாது. 

ஆக இது ஒரு நல்ல த்ரில்லிங்கான படம்.. திரையில் பார்த்தால் படத்தோட வேகம் இன்னும் உங்களுக்குப் புரியும்... 

பாருங்க.. நீங்களும் உங்களோட பிரண்ட்ஸ்ங்கிட்ட இந்த படத்தைப் பத்தி பேசாம இருக்க மாட்டீங்க...

கலக்கியிருக்காரு கிருஷ்ணா...

0 comments

Post a Comment