Sunday, 30 March 2014

உதயநிதியை டீலில் விட்ட நயன்

உதயநிதி- நயன் நடித்து வெளிவந்த படம் இது கதிர்வேலன் காதல்.

இந்த படம் ரிலீசான நேரத்தில், இனி வரும் படங்களிலும் நயனை கதாநாயகியாக்க முடிவு செய்திருந்தார் உதயநிதி.

சொன்னதுபோலவே அடுத்த படத்திலும் ஒப்பந்தம் செய்தார். இதற்கிடையே கதிர்வேலன் காதல் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இதனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட அடுத்த படத்தில் நயன் சம்பளத்தை குறைத்துக்கொண்டார்.
udayanithaiyai-deal-ill-vitta-nayantara
இதனால் படக்குழுவின் நன்மதிப்பை பெற்ற நயன், மீண்டும் உதயநிதியின் நண்பேண்டா படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இந்த படத்துக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தார் நயன்.

மேலும் நயன்தாரா, தற்போது இரண்டு பெரிய பட்ஜெட் தெலுங்கு படங்களுக்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளார்.

ரூ.2 கோடி சம்பளம் கொடுத்து நயன்தாராவின் ஆறுமாத கால்ஷீட்டை மொத்தமாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் வாங்கிவிட்டதால், உதயநிதியின் படத்தை டீலில் விட்டுவிட்டாராம் நயன்தாரா.

இதனால் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்களாம் படக்குழுவினர்.

அதோடு, ஏற்கனவே நண்பேன்டா படத்தில் நடிக்க காத்திருநத காஜல்அகர்வாலை கழட்டிவிடடுவிட்டு, நயன்தாராவை ஒப்பந்தம் செய்ததை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம் உதயநிதி.

ஆனாலும் நயன்தாராதான் எனது ஜோடி என்று முடிவில் உறுதியாக உள்ளாராம் உதயநிதி.

0 comments

Post a Comment