வறுமை கொடுமையிலும் கொடுமை. அதுவும் வெயில் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை.. வாட்டும் வெயிலுடன் வறுமையும் சேர்த்து வாட்டினால் மனிதர்களின் நிலைதான் என்ன?
விவசாய கூலி வேலைகளை மட்டும் நம்பிக்கொண்டிருக்கும் கிராமத்து மக்களுக்கு, மிகப்பெரிய சோதனை காலக்கட்டம் இது.
வறுமையால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் நிலை இன்னும் கூட நீடிக்கிறது.
இன்று கூட நாளிதழ் ஒன்றில் குழந்தைகளோடு ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவனை இழந்த அவள், வயதான மாமனார், மாமியாரோடு வாழ்ந்து வந்திருக்கிறாள். பெரியவர்களுக்கு ஆடு மேய்க்கும் தொழில். அதில் வரும் சொற்ப வருமானத்தை வைத்து காலத்தை தள்ளிக்கொண்டிருக்கிறாள்.
பிள்ளைகள் வளர வளர தேவைகளும் அதிகமாகியிருக்கின்றன. விவசாய வேலையும் இல்லாத நிலையில் எத்தனை நாள்தான் வறுமையோடு போரோடுவது என்று முடிவெடுத்து, தன்னையும், தன் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி உயிரை மாய்த்துக்கொண்டாள்.
பரிதாபம்தான். ஒரு உயிரோடு இரண்டு உயிர்களும் சேர்ந்து போயிருக்கிறது. காரணம் வறுமை. ஆனால் அப்பெண் செய்தது சரியா? இல்லை. நிச்சயமாக இல்லை.
கணவனை இழந்த கைம்பெண்கள் எத்தனையோ பேர் இன்று சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் வைராக்கியம் கொண்டு, தனக்குத் தெரிந்த தொழில்களை வைத்து முன்னேறியிருக்கிறார்கள்.
சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் அப்பெண்ணின் நிலை கண்டு, அவளுக்கு உதவியிருக்க வேண்டும். வறுமை என்றும் கொடியது இல்லை. அதை விரட்ட பல வழிகள் இருக்கிறது என்று நம்பிக்கை தந்திருக்க வேண்டும். அவளின் அறியாமையை போக்கியிருக்க வேண்டும்.
வறுமை கொடியதுதான். ஆனால் அது நிரந்தரமானது அல்ல. நாம் நினைத்தால் அதை விரட்டி, நல வாழ்வு - நல்வாழ்வு வாழ்ந்திடலாம்.

0 comments
Post a Comment