மாயமான விமானம் இருக்கும் இடம் கிட்டதட்ட கண்டுபிடித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மலேசியா விமானம் மாயமானதிலிருந்து பல்வேறு தகவல்களும் கற்பனைத் தகவல்களும் வந்துகொண்டுள்ளன.
தொலைந்து போன மலேசிய விமானம் கஜகஸ்தான் முதல் இந்திய பெருங்கடல் வரையிலான பகுதியில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், விமானம் ராடாரில் இருந்து மாயமான பிறகு 7 மணிநேரம் விண்ணில் பறந்துள்ளது. விமானம் கஜகஸ்தான் முதல் இந்திய பெருங்கடல் வரையிலான பகுதியில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் இந்த இரண்டு பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தேடுதல் பணி நடந்து வருகிறது.
விமானம் மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை அடைவதற்கு முன்பு அதில் உள்ள தொலைத்தொடர்பு கருவியான ஏசிஏஆர்எஸ் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விமானம் மலேசியா மற்றும் வியட்நாம் விமான போக்குவரத்து கட்டுபாட்டு அறைகளை தாண்டுகையில் அதில் இருந்து சிக்னல் கொடுக்கும் டிரான்ஸ்பாண்டர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த சிக்னல் கஜகஸ்தானில் இருந்து வடக்கு தாய்லாந்து அல்லது இந்தோனேசியாவில் இருந்து தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து தான் வந்துள்ளது என்றார். விமானத்தை தேடும் பணியில் இன்று 25 நாடுகள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments
Post a Comment