நேச்சர் பவர் பியூட்டி சோப் விளம்பரத்தில் நடித்தாலும் நடித்தார், அதிலிருந்து தமன்னாவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்து குவிந்துகொண்டே உள்ளது.
முன்னணி இள நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் தமன்னாவுக்கும் அந்த வித்தியாசமான ஆசை வந்துவிட்டது.
அது சரி.. அந்த மாதிரியான கேரக்டர் என்றால் எந்த மாதிரி?
இதுவரை நடித்த படங்கள்ல எல்லாம் பாசிட்டிவ் கேரக்டரிலேயே நடித்துவிட்டதால், வில்லியாக நடிக்க ஆசை வந்துவிட்டது தமன்னாவுக்கு....
தனக்கு தெரிந்த சினிமா நண்பர்களிடம் அதுபோன்ற வில்லி கேரக்டர் எதாவது இருந்தால் சொல்லுங்களேன்பா.. என்று கேட்டுக்கொண்டிருக்கிறாம்.
அழகான கதாநாயகிகளுக்கு இப்படி வித்தியாசமான ஆசை வருது இயல்புதான்.. இதே போல திரிஷாவுக்கும் ஆசை வந்து சொல்லியிருக்காங்க..
பின்னே... ஒரே மாதிரியாக பொம்மை மாதிரியான கேரக்டரில் நடித்து உடம்பை காட்டுற படங்களில் நடிப்பு உணர்வு வருமா? வரவே வராது.
அதுதான் நடிக்கணும்னு ஆசைப்பட்டுதான் வித்தியாசமான கேரக்டரை தேடுறாங்க தமன்னா..நியாயம்தானே..
உங்களோட முடிவு சரிதான்.. நீங்க கலக்குங்க...தமன்னா...!
0 comments
Post a Comment