மலேசிய விமானம் மாயமானது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.
முதலில் மாயமானது என்றார்கள். பிறகு கடலில் விழுந்து, அனைவருமே இறந்துவிட்டனர் என்றார்கள். சமீபமாக விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன.
விமானம் பயணித்த பாதையிலிருந்து திரும்பி சில மணி நேரம் வந்திருக்கிறது என்று ராடார் கண்காணிப்புத் தகவல்கள் கூறுகின்றன.
தற்பொழுது விமானி, சிறையில் இருக்கும் ஒருவரை சந்தித்துப் பேசிய பிறகு விமானத்தை இயக்கியிருக்கிறார். எனவே அவரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கான விமானிகளே விமானத்தை கடத்தியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பயணிகளின் நிலைதான் என்ன?
கடலில் விமானம் விழுந்திருந்தால் எப்படியும் ஒரு உடலாவது விமானம் விழுந்த்ததாக கருதப்படும் இடத்தில் மிதந்திருக்கும். இதுவரை ஒரு உடல் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் தங்களது விமானம், கப்பல்களை அனுப்பி வைத்து தேடுதல் பணிகளை மேற்கொண்ட போதிலும் உண்மையான, உறுதியான தகவல்களையோ, விமானத்தின் பாகங்களையோ அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனை அடுத்துதான் விமானம் கடத்தப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர்.
முதலில் இருவர் போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் பயணம் செய்தனர் என்றனர். பிறகு நால்வர் என்றனர்.
எத்தனையோ கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்கள் எப்படி விமானத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்திருப்பார்கள்? என்ற கேள்வியும் எழுகிறது. இது ஒரு திட்டமிட்ட சதி செயலா? இல்லை தற்செயலாக நடைபெற்றதா என்ற ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையே இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
விமானமோ, விமானப் பயணிகளோ, விமானத்தின் கருப்பு பெட்டியோ கிடைக்கும் வரை தினமும் மலேசிய விமானம் மாயம் ஆன குறித்த தகவல்கள் வெளிவந்துகொண்டு இருக்கும்.
விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் நலமுடன் மீட்க பட்டால் உலக மக்கள் அனைவருமே மகிழ்ச்சியில் ஆழ்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன நடந்தது என்று தெரியாமலா போய்விடும்?
0 comments
Post a Comment