நமீதா என்றாலே தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தனிப்பட்ட கவர்ச்சி, மற்றும் தனது மழலைகலந்த கலப்பட தமிழும், "ஏய் மச்சான்" என்ற செல்லமான அழைப்பும் ரசிகர்களை கட்டி வைக்கும்.
தற்பொழுது பரபரப்பான தேர்தல் சூழ்நிலை நிலவிவரும் நேரத்தில் தமிழ்நாட்டின் முக்கியமான கட்சியொன்றில் நமீதா சேர இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதுபோன்ற தகவல்கள் ஏற்கனவே அவ்வப்பொழுது வந்து போனாலும், இந்த முறை கட்டாயம் நமீதா அந்த கட்சியில் , அவருக்கு பிடித்தமான கட்சியில் இணைந்து தமிழ்நாட்டுக்கு மக்கள் சேவை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.
16 வயதில் நடிக்க வந்த நமீதா, நடிக்க வந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மிக பிரபலமாக இருப்பதோடு, முன்னணி தமிழ் கதாநாயர்கள் அனைவருடன் நடித்துவிட்டார்.
தற்பொழுது தனக்கு வாழ்வு தந்த தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் அரசியல் சேர்ந்து நற்பணி ஆற்றவிருப்பதாக பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
விரைவில் எந்த கட்சியில் சேரப்போகிறார்... எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
0 comments
Post a Comment