Wednesday, 12 March 2014

அடுத்த கிங் மேக்கர் ரஜினிகாந்தா?

படிக்காத மேதை என்று சிறப்பாக அழைக்கப்பட்ட காமராஜருக்கு, கிங்மேக்கர் என்ற உலகப்புகழ்பெற்ற பெயரும் உண்டு. காமராஜரைப் போன்று இந்திய அரசியலில் பிரதமர்களைத் தேர்ந்தெடுக்க  கூடிய பவர் ரஜினிகாந்த்தான் என்று சூசகமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற கோச்சடையான் இசை வெளியீட்டு விழால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா, ஆம் ஆத்மி கட்சிக்கா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

Next-King-Maker-Rajinikanth---Aishwarya


அதற்கு பதில் அளித்த அவர் அரசியலே வேண்டாம் என்று கூறினார். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவரது மகள் ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும் போது எனது தந்தை ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.

ரஜினி ‘கிங்’காக இருக்க வேண்டாம். கிங்மேக்கராக இருந்தால் போதுமானது. தனுஷ் என் தந்தை போல இருக்கிறார். அதனால் தானோ என்னவோ அவரை மணந்தேன்.

3 படத்தில் தனுசை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுத்தேன். எனது அடுத்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றார்.

0 comments

Post a Comment