Sunday, 2 March 2014

என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வராது - சிம்பு

ஹன்சிகாவுடன் காதல் இல்லை.. வெறும் நட்பு மட்டும்தான் என்று சிம்பு அறிவித்திருக்கிறார்.

சிம்பு - ஹன்சிகா காதல் கோலிவுட் இன்டஸ்ட்ரியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.  வழக்கம்போல சில நாட்களிலேயே சிம்பு-ஹன்சிகா காதல் முறிந்துவிட்டது என இருவரும் அறிவித்தனர்.

காதல் முறிவுக்கு ஹன்சிகாவின் அம்மாதான் காரணம் என்று சிம்பு தரப்பில் கூறப்படுகிறது.

simbu-hansika-love-break


ஹன்சிகாவின் எதிர்கால நலனைக் கருதியே இருவரும் பேசி இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில், தங்கள் காதல் முறிவு குறித்து சிம்பு கூறுகையில், ஹன்சிகாவின் நலன் கருதி நான்தான் இந்த முடிவை எடுத்தேன்.

ஆனால் இருவருக்குமிடையில் நட்பு தொடரும், எங்களின் இந்த அறிவிப்பு எங்கள் தொழிலை பாதிக்காது. இருவரும் சேர்ந்து நடிக்க எந்தத் தடையும் இல்லை.

இப்போதும்கூட வாலு படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். சேர்ந்து நடிக்கிறோம். என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றார்.

பலே.. பலே... சினிமாவையே மிஞ்சிவிடும் போல இருக்கிறது சினிமா இன்டஸ்ட்ரியில் ஏற்படும் காதல்..!

0 comments

Post a Comment