ரோஜாகூட்டம் திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுத்து பிரபலமானவர் நடிகை பூமிகா.
தொடர்ச்சியாக முன்னணி கதாநாயர்களுடன் நடித்தார்.
விஜய்யுடன் ‘பத்ரி’, சூர்யாவுடன் ‘சில்லுன்னு ஒரு காதல்’ என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து களவாடிய பொழுதுகள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
தொடர்ந்து தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த பூமிகா, சில மாதங்களுக்கு முன் கர்ப்பமுற்றார்.
இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை பூமிகாவும் உறுதி செய்தார். இதுகுறித்து பூமிகா கூறும்போது, எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.
பின்னே இருக்காதா? உலகத்திலேயே தாயாக மாறுவதுதான் ஒவ்வொரு பெண்ணின் மறுபிறப்பு அல்லவா?
0 comments
Post a Comment