ஒரே நிமிடத்தில் பண பரிவர்த்தனை நடைபெறும் ஓர் அற்புதமான நுட்பத்தைக் கொண்டுள்ளது. ஏ.டி.எம். மெஷின்.
ATM CARD இருந்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லாம். பணம் தேவைப்படும்பொழுது அங்கிருக்கும் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ATM சென்டரில் சென்று வங்கிக்க கணக்கில் உள்ளப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இத்தகைய வசதிகொண்ட இதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எச்சரிக்கையுடன் ATM CARD - ஐ பயன்படுத்தவில்லை என்றால் உங்களது பணத்தை அபகரித்துவிடுவார்கள்.
புதியதாக நீங்கள் ATM CARD பயன்படுத்துபவர்கள் என்றால் உங்கள் நம்பிக்கையான குடும்ப நபர் ஒருவரை உடன் அழைத்துச் சென்று பணம் எடுக்கச் சொல்லலாம். பாதுகாப்பிற்கு பாதுகாப்பும் கிடைக்கும். உங்கள் ATM குறித்த தகவல் மூன்றாம் நபருக்கும் தெரியாமல் இருக்கும்.
ATM சென்டரில் உள்ள காப்பாளரை உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம். மூன்றாம் நபர் எவரையேனும் நம்பி உங்களது பின் நம்பரையோ, பணத்தை எடுப்பதற்கோ உதவுமாறு கேட்டால், நிச்சயம் பாதுகாப்பில்லாம் போகும்.
இப்படிதான் நண்பர் ஒரு புதியதாக ATM CARD வாங்கியவுடன் தன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை முதல் முறை எடுக்கு ஏ.எடி.எம் சென்றார். அங்குள்ள ஒரு இளைஞனை உதவிக்கு அழைத்து, பின் நம்பரையும் குறிப்பிட்டு உதவ சொல்லியிருக்கிறார்.
இளைஞனும் இரண்டு மூன்று முறை ATM போடுவதைப் போன்று போட்டு எடுத்துவிட்டு, உங்கள் ATM - வேலை செய்யவில்லை. பணம் இருக்கிறதா என தெரியவில்லை என சொல்லிவிட்டு, அவரை வெளியே அனுப்பிவிட்டான்.
நண்பரும் தனது சம்பளத்தை வங்கி கணக்கில் நிறுவனம் சேர்க்கவில்லை என நினைத்து வெளியேறிவிட்டார்.
உள்ளே இருந்த இளைஞன் அவரது ATM செருகுவது போல் பாவ்லா செய்துவிட்டு, அவரது பின் நம்பரை உள்ளிட்டு அவருடைய மொத்த சம்பளத்தையும் எடுத்துவிட்டான். பதினைந்தாயிரம் சம்பளத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டான் அந்த இளைஞர்.
நண்பர் பஸ்டாண்டிற்கு நடந்து கொண்டிருக்கும்போது, அவருடைய மொபைலுக்கு மெசேஜ் வர, அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார். பதினைந்தாயிரம் பணம் வித்டிராவல் ஆகிவிட்டதாக அந்த SMS - ல் இருந்தது.
உடனே திரும்பி அந்த ATM -க்கு ஓடிப் பார்த்தால் அந்த இளைஞன் சிட்டாக பறந்திருந்தான். ஐயோ பணம் போச்சே என்ற ஏக்கத்துடன் அவர் வீடு திரும்பிவிட்டார். பிறகு வங்கிக்கு புகார் அளித்தும் கூட அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை. காரணம் அவரது கணக்கிலிருந்து, அவருடைய ATM பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டிருந்தது உறுதியாகி இருந்தது.
நண்பரின் பணத்திற்கு வங்கியும் பொறுப்பேற்கவில்லை. உங்களுடைய பணத்தை இதுபோல மூன்றாம் நண்பர்களிடம் ATM தகவல்களைச் சொல்லி தயவு செய்து ஏமாற வேண்டாம்.
ஜவுளி கடைகள், பெட்ரோல் பங்குகள், மற்றும் சூப்பர் மார்கெட்கள் என இப்பொழுது எங்கு பார்த்தாலும் ATM பயன்படுத்தி பில் செலுத்தும் வசதி வந்துவிட்டது.
இத்தகைய கடைகளில் சில ஏமாற்றுக் கடைகளும், நிறுவனங்களும் உள்ளது. இவர்கள் உங்களிடம் கட்டணத்தைப்பெற ஒன்றுக்கும் மேற்பட்ட மெஷின்களில் உரைத்துவிட்டு, உங்களது பொருட்களுக்கான பில்லை எடுத்துக்கொள்வார்கள்.
இரண்டாவதாக ஏ.எடி.எம் கார்த்தை உறைத்த மெஷின் போலியானதாக இருக்கும். இந்த மிஷின் என்ன செய்யுமென்றால், உங்களது ஏ.டி.எம். தகவல்களை அப்படியே முழுமையாக சேமித்துக்கொள்ளும். அதிக வருமானம் உள்ளவர்களாக இருந்தால், உங்களை அறியாமலேயே உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறைந்திருப்பதை நீங்கள் உணர நீண்ட காலமாகும்.
நீங்கள் உஷாராகி முடிப்பதற்குள், ஒரு கணிசமான தொகை, அவர்களால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து களவாடப்பட்டிருக்கும். எனவே, எந்த இடத்தில் ATM பயன்படுத்தினாலும் உஷாராக இருந்து, ஒரு முறைதான் அது பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களது பணம் பாதுகாப்பாக, உங்கள் வங்கிக் கணக்கிலேயே இருக்கும்.
அதேபோல் நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கியின் ATM சென்டரிலேயே பணம் எடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். ஒருவேளை பணம் வராமல், உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது, என்று தவறான தகவல் வந்தாலோ, பணம் வெளியா வராமல் இருந்தாலோ, உடனடியாக வங்கியில் புகார் செய்ய இந்த முறைப் பயன்படும்.
0 comments
Post a Comment