சிலம்பாட்டம் படத்தின் வெற்றிக்குப் பிறகு டைரக்டர் சரவணன் இயக்கும் படம்தான் சிப்பாய்.
இந்த படத்தில் நடிக்கும் லட்சுமி மேனன் எனக்கு தம்மும் பிடிக்காது, தண்ணியும் பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்கிறார்.
இந்த படத்தில் தான் தனக்கு பிடித்தமான கேரக்டர் அமைந்திருப்பதாக மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் லட்சுமிமேனன்.
தம்மடிப்பதால் ஏற்படுகிற சிக்கல், தண்ணியால ஒரு குடும்பம் எப்படி சீரழியுதுங்கிறது இந்த படத்தில எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.
அதுக்காக ஊர் ஊராப் போய் நாடகம் நடத்தியும், தெருக்கூத்து கட்டியும், அப்பாவி மக்களுக்கு புரியற மாதிரி செஞ்சிருக்கேன்.
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு யாரும் தண்ணியோ, தம்மோ அடிக்க மாட்டாங்கன்னு நம்பறேன் என்று லட்சுமிமேனன் கூறினார்.
அழகுப் பதுமையாய் இந்த படத்தில் தோன்றியிருக்கும் லட்சுமிமேனன், கௌதம் காரத்திக்குடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
எஸ்.எஸ்.கிரியேஷன்ஸ் என்னும் பேனரில் ஸ்ரீநாத் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
திரைப்படம் விரைவில் வந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பலாமாம்..
லட்சுமி மேனன்தான் இதில் சமூக விழிப்பபுணர்வு பணி செய்திருக்காக...
எப்படியும் ஒரு நாலு குடும்பம் திருந்தினால் கூட, அது படத்திற்கு கிடைச்ச வெற்றிதான்.

0 comments
Post a Comment